களப்பணியாளர் பதவி உயர்வில் கட்டப்பஞ்சாயத்து
25 Jun 2026, 1:08 am
<p><strong>களப்பணியாளர் பதவி உயர்வில் கட்டப்பஞ்சாயத்து</strong></p><p>சேலம், ஜூன் 24- மின்சாரத்துறை களப் பணியாளர் பதவி உயர்வு வழங்க மறுத்து, கட்டப்பஞ் சாயத்து செய்யும் அதிகா ரிகளை கண்டித்து உடை யாபட்டி மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத் தில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா வில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில், சேலம் மின் பகிர்மான வட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கான பதவி உயர்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப்பிக்காதவர்களை வைத்துக் கொண்டு, வெள்ளைத்தாளில் விருப்ப மாறு தல் வழங்க வைத்து அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். மேலும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வரை பதவி உயர்வு வழங்காமல் காலம் தாமதம் செய்யப் படுவதை கண்டித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் உடையாபட்டி பகுதி யில் செயல்படும் மேற்பார்வை மின் பொறி யாளர் அலுவலக அதிகாரி அறையில் புதனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும், உடனடி யாக பதவி உயர்வு பெற தகுதியானவர்க ளுக்கு களப்பணியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைத் தலைவர் ஜெயக் குமார், செயலாளர் வெங்கடேஷ், இணைச் செயலாளர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
