நில ஆக்கிரமிப்பு, தாக்குதல்: ஆட்சியரிடம் மூதாட்டி புகார்!
18 Aug 2026, 12:08 am
<p><strong>நில ஆக்கிரமிப்பு, தாக்குதல்: ஆட்சியரிடம் மூதாட்டி புகார்!</strong></p><p>சேலம். ஆக. 17-பட்டா நிலத்தை ஆக்கிரமித்து மூதாட்டியை அரிவாளால் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிபாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாவட்டம், தும்பிப்பாடியை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதிக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தில், 4.5 சென்ட் நிலத்தை அருகில் வசிப்பவர்கள் முறைகேடாக தான செட்டில்மெண்ட் செய்து ஆக்கிரமித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த முறைகேட்டில் கிருஷ்ணகிரி மாவட்டக் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரராஜனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படுவதை தடுத்த மூதாட்டியை அரிவாளால்வெட்டித் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காயம் அடைந்த சரஸ்வதி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவட்டிப்பட்டி காவல் துறையினர் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>மேலும், அருகில் உள்ள இருவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலமும் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், நில ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்துஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p>
