சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்
7 Oct 2026, 12:15 am

சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்

சேலம், அக்.6-எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்களன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சாகுபடிக்கு தயாராகஇருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால்விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், திங்களன்று இரவு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், எடப்பாடி அருகே மெரசப்பட்டி, சித்தூர், சாவடிப்பாளையம், மயிலேறிப்பட்டி, அம்மன்குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் ரஸ்தாளி, கதலி, செவ்வாழை, மொந்தவாழை, பச்சைவாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. திங்களன்று இரவு வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சாகுபடிக்கு தயாராக இருந்த 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனால் தங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேத விவரங்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.