குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
2 Jun 2026, 10:17 pm

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், ஜூன் 2- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 15 நாட்க ளுக்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறி யலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று காலிக்குடங்க ளுடன் எடப்பாடியிலிருந்து பூலாம்பட்டி செல்லும் பிர தான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த எடப்பாடி போலீசார் மற்றும் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில், பூலாம் பட்டியில் பராமரிப்புப் பணிகளுக்காக 10 நாட்கள் குடி நீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறிய அதிகாரி கள், உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்ப டும் என உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.