போதைப் பொருட்கள் விற்பனை செய்த 79 பேர் கைது
7 Jun 2026, 12:14 am
<p><strong>போதைப் பொருட்கள் விற்பனை செய்த 79 பேர் கைது</strong></p><p>சேலம், ஜூன் 6- கடந்த ஓராண்டில் சேலம் மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பதாக மாநகர காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி யில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறி முதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாநகர காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி சேலத்தில் சனி யன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில், சேலம் தாதகாப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் போதை மாத்தி ரைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மேகலாவிடம் (48) போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கிவைத்து இளைஞர்க ளுக்கு விற்பது தெரியவந்தது. மேலும், அவரது கணவர் கண்ணன் (50) கடந்த 21 ஆம் தேதி தாரமங்கலம் பகுதி யில் போலீஸார் நடத்திய சோதனை யின்போது, போதை மாத்திரைகளை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மேகலாவை கைது செய்த போலீஸார் வீட்டில் பதுக்கி வைத் திருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான போதை மாத்திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ. 6.82 லட்சமாகும். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என தொடர் விசாரணை நடைபெற்று வருவ தாகவும் ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்தார். மேலும், கடந்த 6 மாதத்தில் சேலம் மாநகர காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
