தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீரை தனியாருக்கு டென்டர் விடுவதற்கு எதிர்ப்பு

15 Jul 2026, 10:55 pm
குடிநீரை தனியாருக்கு டென்டர் விடுவதற்கு எதிர்ப்பு

குடிநீரை தனியாருக்கு டென்டர் விடுவதற்கு எதிர்ப்பு

சேலம், ஜூலை 15- குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் என்ற தனியார் நிறு வனத்திற்கு ஒப்பந்தம் வழங்கிய சேலம் மாநகராட்சியின் செயல் பாட்டிற்கு, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 10 லட் சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களின் குடிநீர் தேவையை போக்க மேட்டூர் அணையில் இருந்து குழாய் மூலம் ஆங்காங்கே மேல்நிலை நீர் திறக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தற்போது சேலம் மாந கராட்சி வழங்கி வரும் குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனமான சூயஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க மாநகராட்சி அனுமதி அளித்துள் ளது. இந்த அனுமதியை கண்டித்தும், தொடர்ந்து மாநகராட்சியே பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்டப் பொருளாளர் எம்.கனக ராஜ், கிழக்கு மாநகரத் தலைவர் பிர பாகரன், செயலாளர் விமல், வடக்கு மாநகர நிர்வாகி முத்துக்குமரன், மேற்கு மாநகர நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

சிபிஎம் தலைவர்கள் மேயரிடம் மனு

சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை தனி யாருக்கு விடக்கூடாது, தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமே விநியோ கிக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி சேலம் மாநக ராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் நேரில் மனு அளித்தார். உடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.