பள்ளிக்கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பில்லை: ஆணையாளருடன் கவுன்சிலர் வாக்குவாதம்
2 Nov 2026, 11:58 pm

பள்ளிக்கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பில்லை: ஆணையாளருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

சேலம், நவ.2-சேலத்தில் பள்ளிக்கட்டிட திறப்பு விழாவுக்கு மேயர், கவுன்சிலருக்கு அழைப்பில்லை எனக்கூறி, மாநகராட்சி ஆணையாளருடன் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேலம் மாநகராட்சி, கிச்சிப்பாளையம் புதிய தெருவில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். மாநகராட்சி நிதியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிட திறப்பு விழாவுக்கு மேயர் ராமச்சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறி, 43 ஆவது வார்டு கவுன்சிலர் குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முறையான அழைப்பும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என கவுன்சிலர் வலியுறுத்தினார். பின்னர் அமைச்சரிடமும் முறையிட்டார். அப்போது அமைச்சருடன் இருந்த கட்சி நிர்வாகிக

ளுக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மேயரிடம் பேசுவதாக அமைச்சர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் குணசேகரன், மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு மேயர், கவுன்சிலர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும், ஆணையாளர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.