சேலம் மாநகரின் நிலத்தடி நீரை விஷமாக்குவதா?
26 Sept 2026, 12:59 am

சேலம் மாநகரின் நிலத்தடி நீரை விஷமாக்குவதா?

சேலம், செப்.25–சேலம் மாநகராட்சியின் காற்றையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் கழிவுகளை கொண்டு, அரபி காலேஜ் அருகே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கழிவுமேலாண்மை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள மாநகராட்சிநிலத்தை ’பூஜ்ஜியம்’ மதிப்பீடு எனக்கூறி தனியார் நிறுவனத்திற்கு இலவசமாக ஒப்படைக்கும் அரசின் முடிவைரத்து செய்ய வேண்டும். சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவைத் திரும்பப்பெற வேண்டும். கடந்த ஆகஸ்ட் 28 அன்று மாமன்றத்திற்குள்அக்கிரமமாக நுழைந்து கூட்டத்தை கலைக்க முயன்ற 50 பேர் கொண்டகும்பலையும், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி விதிகளை மீறி செயல்பட்ட மாநகராட்சி ஆணையாளர் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, முறைகேடாக தனியாரிடம் ஒப்படைத்த அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளரை கண்டித்தும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் தீவிர

மடைந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.