பதிவாளரை மாற்றக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம்!
30 Oct 2026, 11:58 pm
<p><strong>பதிவாளரை மாற்றக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம்!</strong></p><p>சேலம், அக்.30–கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் நிரந்தரமற்றும் தற்காலிக பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கும் பதிவாளரை மாற்றக்கோரி,சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் வெள்ளியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டி (சி.எம்.எஸ்.) உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ஸ்டோர் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரே மாதிரியான விலையில் விற்பனை செய்ய வேண்டும். அரசு நியாய விலைக் கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும்போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவே பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். இதனால் பண்டிகைக் காலங்களில் கூட்டுறவு நிறுவனங்களின் வணிகம் பாதிக்கப்படுவதுடன், கூட்டுறவுத்துறை மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் தொழில் சார்ந்த நிர்வாகம் சீர்குலைகிறது. எனவே,ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கும் பதிவாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூட்டுறவு பணிகள் முழுமையாக பாதிப்பு ஏற்பட்டது.</p>
