மீன் விரலிகளை இருப்பு செய்த ஆட்சியர்
22 May 2026, 12:18 am
<p><strong>மீன் விரலிகளை இருப்பு செய்த ஆட்சியர்</strong></p><p>சேலம், மே 21- நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ், மேட்டூர் நீர்த்தேக்கத்தின் திப்பம்பட்டி பகுதி யில் 4 லட்சம் மீன் விரலிகளை மாவட்ட ஆட்சியர் இருப்பு செய்தார். நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட் டத்தின் கீழ் சேலம் மாவட்டம், மேட்டூர் நீர்த்தேக்கத்தின் திப்பம் பட்டி பகுதியில் 4 லட்சம் மீன் விரலிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வியாழனன்று இருப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், தமிழ்நாடு அரசின் சார்பில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் விரலிகள் இருப்பு செய்திடும் திட்டத் தின் கீழ் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி காவிரி கரையோர பகுதியில் மீன் விரலிகள் ஆற்றில் விடப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன்விரலிகளின் எண்ணிக் கையை அதிகபடுத்த ஒவ்வொரு ஆண்டும் மீன்விரலிகள் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கு மேட்டூர் நீர்த்தேக்கத்திற்கு மீன்விரலிகள் இருப்பு செய்திட ஒரு கோடி மீன்விரலிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 84.40 லட்சம் இலக்கு எய்தப் பட்டுள்ளது. எஞ்சியுள்ள இலக்கினை எய்திடும் பொருட்டு, புதனன்று மேட்டூர் நீர்த்தேக்கம், திப்பம்பட்டி பகுதியில் 3 லட்சம் ரோகு மீன்விரலிகள் மற்றும் 1 லட்சம் மிர்கால் மீன் விரலிகள் என மொத்தம் 4 லட்சம் மீன்விரலிகள் விடப்பட்டுள் ளது. இதன் மூலம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிக ரித்திடவும், நாட்டின மீன் இனங்களை பெருக்கிடவும் பயனுள்ளதாக அமையும், என்றார். இந்நிகழ்வின்போது, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் பி.சுகுமார், மீன்வளத் துறை உதவி இயக்குநர் த.உமா கலைச்செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
