தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைத்திடுக
20 Jul 2026, 11:38 pm
<p><strong>தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைத்திடுக</strong></p><p>சேலம், ஜூலை 20 தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்ட சிறப்பு பேரவை யில் அரசு தேங்காய் கொள்முதல் நிலை யங்களை அமைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூர் அருகில் மக்கள் மருத்துவர் லட்சுமி நர சிம்மன் நினைவு தோட்டத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்டத் தலை வர் வி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற பேரவையில் மாநில பொதுச் செயலாளர் துளசி நாராயணன் சிறப்புரையாற்றினார். இதில், தேங்காய் கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்திட வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ வுக்கு ரூ.180 வழங்க வேண்டும். கொப் பரை உற்பத்திக்குரிய இயந்திரத்தை மானியத்தில் வழங்கிட வேண்டும். தென்னையை தாக்கும் நோய்களில் இருந்து பாதுக்காக்க உரிய மருந்து களை மானிய விலையில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்பேரவையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர் பி.தங்கவேலு, நிர்வாகிகள் ஆர். ராஜேந்திரன், பொறியாளர் அனுராதா லட்சுமி நரசிம்மன், சிபிஎம் மேட்டூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.வசந்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மாவட்டத் தலைவராக கே.செல்வகுமார், செயலா ளராக ஆர்.நல்லத்தம்பி, பொருளாள ராக மு.பெரியண்ணன், உதவித்தலை வராக அனுராதா லட்சுமி நரசிம்மன், உதவி செயலாளராக எஸ்.மணி உள் ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
