கற்பித்தலில் புதுமை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மாவட்ட சி.இ.ஓ பாராட்டு
27 Jun 2026, 1:04 am
<p><strong>கற்பித்தலில் புதுமை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மாவட்ட சி.இ.ஓ பாராட்டு</strong></p><p>சேலம், ஜூன் 26- கற்பித்தலில் புதுமை மற்றும் படைப்பாற்றலை திறம் பட வெளிப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அள வில் திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் இருந்து சிறப்பாக செயல்பட்ட 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இடங்கணசாலை நக ராட்சி கே.கே.நகர் அரசு தொடக்கப் பள்ளியின் இடை நிலை ஆசிரியர் அருளுக்கு, அவரது சிறந்த கற்பித் தல் திறனை பாராட்டி வியாழனன்று சான்றிதழ் வழங் கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர் அருளுக்கு மகுடஞ்சாவடி வட் டார கல்வி அலுவலர் பிரேமானந்த், தலைமையாசிரியர் வையாபுரி, சக ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரி கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p>
