முந்தய பக்கம்

ரயில்வே மேம்பாலம் அமைக்க அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

1 hour before
ரயில்வே மேம்பாலம் அமைக்க அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

ரயில்வே மேம்பாலம் அமைக்க அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

சேலம், அக்.12-சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர்திங்களன்று அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள்,வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதுடன், கனரக வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது. ரயில்கள் கடந்து செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால், இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ரயில்வே கேட் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தால் நெரிசல் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவும், பேருந்து நிறுத்தத்தை வேறுஇடத்துக்கு மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து ஆய்வு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram