சாலை வசதி கேட்டு மறியல்
17 Jul 2026, 11:14 pm
<p><strong>சாலை வசதி கேட்டு மறியல்</strong></p><p>சேலம், ஜூலை 17- அன்னதானப்பட்டி அருகே மூன்று ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, உடனடியாக சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். சேலம் மாநகரம், அன்னதானப்பட்டி அருகே உள்ள நடுத் தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த மூன்று ஆண்டு களாக சாலை மிக மோசமாக இருப்பதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறி அப்பகுதி மக்கள் அன்னதானப்பட்டி பிர தான சாலையில் வெள்ளியன்று மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகும் பொதுமக்களை சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், சாதி மற்றும் கட்சி அடிப்படையில் செயல் படுவதால் மூன்று ஆண்டுகளாக சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்த கோவில் திருவிழாக்கள் இந்த சாலை வழியாக நடைபெறுவதால் தேர் கவிழும் அபாயம் மற்றும் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் கூறினர். எனவே, மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>
