சேலம் விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனம்
29 Jun 2026, 12:24 am
<p><strong>சேலம் விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனம்</strong></p><p>சேலம், ஜூன் 28- ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலையத்தில், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டால், ஒரே நிமிடத்தில் அனைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் அதிநவீன தீயணைப்பு வாகனம் வந்தடைந்தது. </p><p>சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும், தரையில் இறங்கும் விமானம் மற்றும் ஏறும் விமானங்கள் திடீரென தீ பிடித்தால் உடனடியாக அணைப்பதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த தீயணைப்பு வாகனங்கள் மிகவும் பழமை வாய்ந்த வாகனம் என்ப தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய வாக னம் வாங்க விமான நிலைய நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உத் தரபிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் உள்ள பார்டியா என்ற நிறுவன தயாரிப்பில் ரோஷன் பாம்பர் என்ற புதிய அதிநவீன தீயணைப்பு வாகனம் ஞாயிறன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தது. இந்த ரோஷன் பாம்பர் என்ற இந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீருடன் 8 ஆயிரம் லிட்டர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் திரவத்தை கலந்து சுமார் 120 வினாடிகளில் விமானத்தில் பிடித்த தீயை அணைக்க முடியும். மேலும், விமானம் தரை இறங்கும் முன் தீ பிடித்தால் நேரடியாக விமானி இந்த வாகனத்திற்கு செய்தி அனுப்பும் வசதியும் உள்ளது. இந்த தீயணைப்பு வாகனம் அதிக திறன் கொண்ட தண்ணீரை பீச்சி அடிக் கும் தன்மை உள்ளதால் திங்களன்று (இன்று) ஒத்திகை பார்க்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரி வித்தனர்.</p>
