உடுமலை கிராமங்களில் சலகெருது ஆட்டம் தொடக்கம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>உடுமலை கிராமங்களில் சலகெருது ஆட்டம் தொடக்கம்</strong></p>
<p>உடுமலை, ஜன.7 - உடுமலை சுற்று வட்டார கிராமங்க ளில், மார்கழி மாதம் துவக்கத்தை யொட்டி சலகெருது ஆட்டம் துவங்கி யுள்ளன. குறிப்பாக பெரிய பாப்ப னூத்து கிராமத்தில் நடந்த சலகெருது ஆட்டம், மக்களிடையே வியப்பை ஏற்ப டுத்தியுள்ளது. ஒரு கிராமத்தின் வளம், அங்குள்ள கால்நடை வளத்தை பொறுத்து நிர்ண யிக்கப்படுகிறது. இறைவன், கால்நடை உருவில் வரம் அளிப்பதாக கருதும் கிராம மக்கள், பாரம்பரிய கலையையும் போற்றி பாதுகாக்கின்றனர். இவ்வாறு பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெ டுக்கும் காளைக் கன்றுகள், இறைவ னுக்கு சொந்தமானது என கருதப்படுகி றது. அந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகின்றன. அதை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும், தங்கள் பகு திக்கு ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெ டுத்து, அவற்றை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகளுக்கு ‘சலகெருது’ என பெயரிட்டு, ஆல்கொண்டமால னுக்கு உரியதாக போற்றப்படுவதால், இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட அணிவிக்கப்படுவது கிடையாது. இந்த கன்றுகள், கிராமத்தில் சுதந்திர மாக சுற்றித் திரியும், எருதுகளின் பரா மரிப்பை மக்களே ஏற்பர். மார்கழி மாத இரவுகளில், ஊர் பொது இடத்தில், இசைக்கு தகுந் தாற்போல் ஆடி செல்ல, உறுமி இசை கலைஞர் தலைமையில், தேவராட்டம் குழுவினரால் இந்த கன்றுகள் தயார்ப டுத்தப்பட்டும் வருகிறது. ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சி களை கையில் ஏந்தி, உறுமி இசைக் கேற்ப காளையின் முன்பு ஆடிச் செல் வர். ஆட்டக்காரரின் ஆட்டத்திற்கு ஏற்ற வாறு, தனது தலையை அசைத்தவாறு காளைகள் அவர்களை பின்தொடரும். அவ்வாறு, ஆட்டக்காரரின் அசை வுகளுக்கு பின் தொடரும் சலகெருது, ஆட்டத்தில், சிறிய மாற்றம் ஏற்பட்டா லும், ஆட்டக்காரரை முட்டுவது போல, ஆவேசமாக பாயும். அப்போது, குச்சி களை தரையில் ஊன்றி, தடுப்பு போல ஏற்படுத்தி, ஆட்டக்காரர் எருதின் தாக்கு தலில் இருந்து தப்பிப்பார். இவ்வாறு, மார்கழி மாதம் முழுவதும், தங்கள் கிரா மங்களில் சலகெருது ஆட்டத்தை ஆடும் மக்கள், தை பிறந்ததும், சிறப்பு பொங்கலை எருதுக்காக வைத்து வழி படுவர். பின்னர், கால்நடைகளின் தெய்வ மாக கருதப்படும் ஆல்கொண்டமால் கோவிலுக்கு, அவை அழைத்து செல் லப்படுகின்றன. அங்கு, உடுமலை சுற் றுப்பகுதி கிராமங்களில் இருந்து, அனைத்து சலகெருதுகளும் வரவ ழைக்கப்பட்டு, திருவிழா நடக்கும். பொங்கல் திருவிழா முடிந்ததும், நாட் டுப்புற பாடல்கள் பாடப்பட்டு, சலகெ ருது பால் எடுக்கும் நிகழ்ச்சியும் நடத் தப்படும். கிராம வள மேம்பாட்டுக்கு கார ணமாக திகழும் சலகெருதை உடு மலை பகுதி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தற்போது, கே.வல்லக்கொண்டபு ரம், ஜே.என்.பாளையம், பி.என்.சாலை யூர், விளாமரத்து பட்டி, சாலையூர், கொடிங்கியம், உடுக்கம்பாளையம் என பல்வேறு கிராமங்களில் இந்த பாரம்ப ரியம் தொடர்வது குறிப்பிடத்தக்கதா கும். பெரிய பாப்பனூத்து பகுதியில் நடந்த சலகெருது ஆட்டம் கிராம மக் களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காணும் பொங்கலையொட்டி, சோமவா ரபட்டி மாலகோவிலுக்கு சலகெருது அழைத்துச் செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி யுள்ளன.</p>
