முந்தய பக்கம்

சக்தி ஆட்டோ காம்போனென்ட் தொழிலாளர்களுக்கு போனஸ்

1 Nov 2026, 1:29 am
சக்தி ஆட்டோ காம்போனென்ட் தொழிலாளர்களுக்கு போனஸ்

சக்தி ஆட்டோ காம்போனென்ட் தொழிலாளர்களுக்கு போனஸ்

திருப்பூர், அக்.31 -சக்தி ஆட்டோ காம்போனென்ட் தொழிலாளர்களுக்கு 18.25% போனஸ் என சிஐடியு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ காம்போனெண்ட் நிறுவனத்தில் நிர்வாகத்திற்கும், சிஐடியு சங்க நிர்வாகிகளுக்கும் இடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐந்து கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை சனியன்றுஉடன்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு 18.25% போனஸ் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த போனஸ் பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், இன்ஜினியரிங் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சந்திரமூர்த்தி, துணைத் தலைவர்கள் அர்ஜுனன், ராஜா, துணைச் செயலாளர்கள் காமராஜ், சிவராஜ் மற்றும் கண்ணையன் ஆகியோர் பங்கேற்றனர்.

சக்தி ஆலை நிர்வாக தரப்பில் நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, கார்த்திகேயன், தலைமை அலுவலகத்தில் இருந்து சி.எஸ்.ஆர் செல்லமுத்து, ஹெச்.ஆர் சரவணன், நிறுவனத்திலிருந்து ஏஜிஎம் பரமேஸ்வரன், டிஜிஎம் தமிழரசன் மேலாளர்கள் பகவதி, மற்றும் யாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு 17.75% போனஸ் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அதைவிட சற்று கூடுதல் போனஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் என ஆயிரத்து 500 பேர் வரை பயன் பெறுவார்கள் என்று சிஐடியு சங்கத்தினர் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram