சக்கம்பட்டி மூத்த தோழர் சுப்பு காலமானார்
24 Jun 2026, 9:47 pm
<p><strong>சக்கம்பட்டி மூத்த தோழர் சுப்பு காலமானார் </strong></p><p>தேனி, ஜூன் 24- ஆண்டிபட்டி -சக்கம்படியை சேர்ந்த சுப்பு என்ற சுப்பிரமணி (92) புதன்கிழமை காலை காலமானார். கடந்த 60 ஆண்டுக்கு மேலாக ஆண்டிபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியில் களமாடி, 30க்கும் மேற் பட்ட கிளைகளை உருவாக்கினார். சிலம்பம் கற்றுக் கொடுத்து வாலிபர் களை கட்சியை நோக்கி ஈர்க்க காரணமாக இருந்தவர். அன்னாரது மறைவு செய்தி அறிந்து மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன், மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண்ணன், ஜி.எம்.நாகராஜன், விதொச மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு, ஒன்றியச் செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் உள் ளிட்ட தலைவர்கள் அன்னாரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.மாரிமுத்து தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.</p>
