முந்தய பக்கம்

மாலுமி நிஷாந்த் மனைவிக்கு அரசுப் பணி

21 Jun 2026, 9:07 pm
மாலுமி நிஷாந்த் மனைவிக்கு அரசுப் பணி

மாலுமி நிஷாந்த் மனைவிக்கு அரசுப் பணி

சென்னை, ஜூன் 21 - மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டிருந்த ஓமன் நாட்டு எண்ணெய் கப்பலான “எம்.டி. செலஸ்டியல்”-ல் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றிய தூத்துக்குடி யைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் ஜூன் 11 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத தாலும் கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் அவர் இறந்ததாக இந்திய மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் சங்கமான எஃப்.எஸ்.யூ.ஐ குற்றம்சாட்டியுள்ளது. மாலுமியின் உடல் தற்போது உடற்கூராய்வுக்காக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறும், கப்பல் நிறுவனத்திடம் உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறும் நிஷாந்தின் மனைவி சரோபின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அமைச்சரின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் உடனடியாக ஆணை பிறப்பித்து, நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு தூத்துக்குடி மேலாளர் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக இளநிலைப் பணி வழங்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram