சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் விபத்து ஏற்படும் முன் மூட கோரிக்கை
6 Oct 2026, 1:11 am

சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் விபத்து ஏற்படும் முன் மூட கோரிக்கை

சென்னை, அக்.5-சென்னை சைதாப்பேட்டை தாடண்டர்நகர் அரசு குடியிருப்பு பகுதியில், கடந்த பலநாட்களாக மழைநீர் வடிகால்வாய் எவ்வித பாதுகாப்புக் கட்டமைப்பும் இன்றித் திறந்தநிலையில் உள்ளது.

நிறைவுபெறாமல் ஆபத்தான முறையில்காட்சியளிப்பதால் தினசரி நடமாடும்பொதுமக்களின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, இரவுக் நேரங்களில் வெளிச்சமின்மை மற்றும் போதிய விளம்பரப் பலகைகள் இல்லாத காரணத்தினால், அப்பகுதியைக் கடந்து செல்லும் முதியவர்கள், பள்ளிச் செல்லும் சிறுவர்கள் மற்றும் வேலை முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் சற்று கவனக்குறைவாகக் கால் தவறி விழுந்தால் கூட மிகப்பெரிய உயிரிழப்புகளோ அல்லது பலத்த காயங்களோ ஏற்படும்பேரிடர் சூழல் நிலவுகிறது.

எனவே, விபத்துகள் அரங்கேறும் முன்புசென்னை மாநகராட்சி நிர்வாகம், உடனடியாகத் தலையிட்டு, திறந்திருக்கும் வடிகால்வாய்களைப் பாதுகாப்பான முறையில் மூடுவதோடு, பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என தாடண்டர்நகர் அரசு குடியிருப்பு பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.