தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சைதாப்பேட்டை வாரிய குடியிருப்புகளை பொது குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்க! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

28 May 2026, 11:31 pm
சைதாப்பேட்டை வாரிய குடியிருப்புகளை பொது குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்க! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
<p><strong>சைதாப்பேட்டை வாரிய குடியிருப்புகளை பொது குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்க! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, மே 28 - வாரிய குடியிருப்புகளை பொது குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனை மீறுவோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைதாப்பேட்டை தொகுதி, 169 வட்டம் சுப்புபிள்ளை தோட்டத்தில் வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 450 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு குலுக்கள் முறையில் நடைபெறுவது வழக்கம். இதற்கு மாறாக, ஏ-பிளாக்கில் உள்ள சுமார் 40 வீடுகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரியுள்ளனர். திமுக ஆட்சி இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தரைத்தளம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். எஞ்சிய வீடுகள் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள அரசிடம் மீண்டும் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இசைவாக சைதை தொகுதி தவெக எம்எல்ஏ அருள் பிரகாசமும், அதிகாரிகளில் சிலரும் இருப்பதாக தெரிகிறது. குடியிருப்பின் ஒருபகுதியை குறிப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்கு ஒதுக்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சாதிய பாகுபாடுகளை அரசே ஊக்குவிப்பதாகும். இது கண்டிக்கத்தக்கது. இதற்கெதிராக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். எனவே, ஒருபகுதி வீடுகளை குறிப்பிட்ட சில சமூகத்திற்கு ஒதுக்குவதை தமிழ்நாடு அரசும், வாரியமும் அனுமதிக்கக் கூடாது. தரைதளத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். இதர குடியிருப்புகள் அனைத்தும் பொதுகுலுக்கள் முறையில் பாகுபாடின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு மாறாக செயல்படும் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.