தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்!

13 Jul 2026, 8:53 pm
‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற  எழுத்தாளர் பூமணி காலமானார்!

‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்!

சென்னை, ஜூலை 13 - தமிழ் இலக்கிய உல கின் மூத்த எழுத்தாளரும், கரிசல் வட்டார இலக்கி யத்தின் மிக முக்கிய ஆளு மையுமான பூமணி (79), காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பல னின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரவு 11 மணி யளவில் காலமானார்.

இலக்கியப் பணி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12 அன்று பூலித்து ரை - தேனம்மை தம்பதிய ருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் பூலித்து ரை மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்ற இவர், பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடு பட்டார். 1971-இல் இவரது முதல் சிறுகதையான ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளியானது.

சாகித்ய அகாடமி விருது

வெக்கை, பிறகு, நை வேத்யம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை போன்ற நாவல் களும், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவரின் இலக்கியப் பங்களிப்பாகும். அஞ்ஞாடி நாவலுக்காக 2014 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், 2011-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது, இலக் கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, விளக்கு விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அசுரன் திரைப்படம்

தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக (என்.எப்.டி.சி) இவர் இயக்கிய ‘கருவேலம்பூக் கள்’ திரைப்படம் பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. இவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப் படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

அரசு மரியாதை

இலக்கியத் துறைக்கு பூமணி ஆற்றிய பங்க ளிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறி வித்திருந்தார். அதனடிப்படையில், கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள இல்லத்தில் செவ்வாயன்று (ஜூலை 14) அரசு மரியாதை யுடன் பூமணி உடல் நல்ல டக்கம் செய்யப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

பூமணியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டா லின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ள னர். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக கட்டமைப்பை எளிமையான மொழியில் வெளிப்படுத்திய பூமணியின் படைப்புகள் மூலம், அகராதியில் இடம் பெறாத பல வட்டார வழக்குச் சொற்கள் ஆவணப்படுத்தப் பட்டதாக ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார்.

‘இடதுசாரிச் சிந்தனையாளராக வாழ்ந்து மறைந்த பூமணி!’ சிபிஎம் புகழஞ்சலி

சென்னை, ஜூலை 13 - சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்த பூமணி அவர்களின் படைப்புகள், தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை. ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மார்க்சியத்தையே தன் வாழ்க்கைக் கண்ணோட்டமாகக் கொண்ட இடதுசாரி சிந்தனை யாளராக வாழ்ந்தார். அவரது எழுத்துக்களில் வெளிப்பட்ட சாதி எதிர்ப்புணர்வும், உழைக்கும் மக்கள் மீதான அவரது நேசமும், ஒரு முற்போக்கு படைப்பாளிக்குரிய பண்பாகும். தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தோழர் பூமணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நேசர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத் தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.