தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 Nov 2025, 3:41 pm

தில்லி கார் குண்டுவெடிப்பு; முதல்வர் இரங்கல்

சென்னை: தில்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் குண்டுவெடித்து சிதறியது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித் துள்ளார். அதில், “13 அப்பாவி உயிர்களைப் பறித்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந் தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை உடைக்கும்படியாக உள்ளது. உயிரிழந்தவர் களுக்கு எனது இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரை வில் குணமடைய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.11) தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61 கோடியே 74 லட்சம் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அவர், அப்பாலத்திற்கு “தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 திருக்கோவில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் 16 அர்ச்ச கர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார். அடுத்து, காவல்துறையின் சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக ரூ. 12 கோடி செலவில் 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு அரசின் தலை மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது. கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபா கரன் உள்ளிட்டோர் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் வழங்கியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், தவெகவுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற் கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். மனுவில் 10 விருப்பச் சின்னங்களின் பட்டியலை தவெக சமர்ப்பித்து உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ள தால், பொது சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவு டிசம்பர்- 2025 இறுதிக்குள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்குரிமையைப் பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமி

சென்னை: வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் உடந்தையாக செயல்படுகிறார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அதிமுக, தமிழர்களின் வாக்குரிமையைப் பற்றியா கவலைப்படும் என்று கேள்வி எழுப்பிய அவர், தமி ழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது” என்றார். ஆனால் அதி முகவோ எஸ்ஐஆர் நடவடிக்கையை ஆதரித்து வழக்கு தொடர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

விடுதிகள் வணிகக் கட்டடங்கள் அல்ல!

சென்னை: மாண வர்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான விடுதி களுக்கு சொத்து வரி செலுத்த சென்னை, கோவை மாநகராட்சிகள் ஆணையிட்டன. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி விடுதி உரி மையாளர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு செவ்வாயன்று உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி மன்றம், தனியாக வாட கைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லா தவர்கள்தான் விடுதி களில் தங்குகின்றனர் என்றும், விடுதிகள் குடி யிருப்பு கட்டடங்களே தவிர, வணிக கட்டடங் களாக கருத முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து விடுதிகள் வணிகக் கட்டடங்கள் அல்ல என்று கூறி, மாநக ராட்சி பிறப்பித்த உத்த ரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பாதுகாப்பு கோரி சகாயம் ஐஏஎஸ் மீண்டும் மனு

சென்னை: மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் உயர் நீதி மன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட சகாயத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதை ஏற்று 2014 ஆம் ஆண்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாது காப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை எந்த அறிவிப்பும் இல்லாமல் 2023 ஆம் ஆண்டு மாநில அரசு திடீரென திரும்பப் பெற்றது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியம் அளிக்க காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.