தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 நிமிட டெலிவரி கைவிடல் வேகத்தை விட பாதுகாப்பே முக்கியம் தொழில் முனைவோர் சங்கத்தலைவர் கே.இ.ரகுநாதன் கருத்து

17 Jan 2026, 2:42 pm
10 நிமிட டெலிவரி கைவிடல் வேகத்தை விட பாதுகாப்பே முக்கியம் தொழில் முனைவோர் சங்கத்தலைவர் கே.இ.ரகுநாதன் கருத்து
<p><strong>10 நிமிட டெலிவரி கைவிடல் வேகத்தை விட பாதுகாப்பே முக்கியம் தொழில் முனைவோர் சங்கத்தலைவர் கே.இ.ரகுநாதன் கருத்து</strong></p> <p>சென்னை, ஜன. 17- கிக் தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் அவர்களின் தொழிற்சங்கங் களின் தொடர்ச்சியான கோரிக் கையை ஏற்று, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா, முக்கிய டெலிவரி நிறுவனங்கள் தங்கள் 10 நிமிட டெலிவரி காலக் கெடுவை கைவிடுமாறு அறிவுறுத்தி யுள்ளார். இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கே.இ.ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;10 நிமிட டெலிவரி&rdquo; என்ற வாக்குறுதியை நீக்கியிருப்பது ஒரு நல்ல ஆரம்பம் தான். ஆனால் இது ஒரு தொழிலாளர் பாதுகாப்பு சீர்திருத்தம் மட்டும் அல்ல; இந்தியா வின் பிளாட்பாரம் பொருளாதாரம் தவறான பாதையில் வளர்ந்ததன் அறி குறி என்பதே பெரிய உண்மை. க்விக்-காமர்ஸ் துறையில் வேகம் - வளர்ச்சி என்ற தவறான சமன்பாடு உருவாக்கப்பட்டது. உண்மையில் இது &nbsp;உற்பத்தித் திறனை உயர்த்தவில்லை; மாறாக அழுத்தம், ஆபத்து, செலவு அனைத்தையும் கடைசி சங்கிலியான கிக் ஊழியர்கள் மற்றும் நகரப் பொது மக்கள் மீது தள்ளியது. சாலை பாது காப்பு, எரிபொருள் வீணாக்கம், நகர நெரிசல், மனஅழுத்தம் இவை அனைத்தும் வெளிப்புறங்கள் என ஒதுக்கப்பட்டு,லாபம் மட்டும் தனியார்மயமாக்கப்பட்டது. இதை நவீனத்துவம் என்று சொல்ல முடியாது; இது ஒழுங்குபடுத்துவதில் உள்ள ஓட்டையை பயன்படுத்திய வளர்ச்சி. வேலைவாய்ப்பு கோணத்தில் இது இன்னும் ஆபத்தானது. திறன் வளர்ச்சி &nbsp;இல்லாத, சமூக பாதுகாப்பு இல்லாத, அல்காரிதம் கட்டுப்படுத்தும் வேலை கள் பெருகுகின்றன. இந்தியா மக்கள் தொகை ஈவுத்தொகை பேசும் போது, இப்படியான மனஅழுத்தம் நிறைந்த, தற்காலிக வேலை மாடல்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. &ldquo;10 நிமிடம்&rdquo; என்ற வார்த்தையை அகற்றினாலும், இன்சென்டிவ் மற்றும் அபராத அமைப்புகள் மாறாவிட்டால், ஊழியர்களின் நிலையில் மாற்ற மில்லை. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பார்வையில், இந்த அதிவேக டெலிவரி மாடல் பெரிய முதலீடு கொண்ட பிளாட்பாரம்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. Dark stores, cash burn ஆகியவற்றால் சிறு கடைகள், உள்ளூர் வணிகர்கள், சிறிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இது சந்தை ஒருங்கிணைப்பை அதிகரித்து, தொழில் முனைவோர் சூழலை பல வீனப்படுத்துகிறது. இது உண்மையான போட்டி அல்ல. மிக முக்கியமாக, இந்த விவகாரம் இந்தியாவில் பிளாட்பார்ம் பொருளா தாரத்திற்கு தெளிவான கொள்கை கட்ட மைப்பு இல்லை என்பதை வெளிப் படுத்துகிறது. பிரச்சனை வந்த பிறகு தீர்வு என்ற நிலை தொடர்கிறது. வேகம் அல்ல, பொறுப்புள்ள வர்த்தகம் தான் நாட்டின் தேவை. டெலிவரி 10 நிமிடமா, 20 நிமிடமா &nbsp;என்பதல்ல, மனித உயிர், மரியாதை மிக்க வேலை, நீடித்த பொருளாதாரம் ஆகியவற்றை மதிக்கும் வளர்ச்சி மாடலையா, அல்லது வேகம் மற்றும் மதிப்பீடு மையமான வளர்ச்சியை இந்தியா தேர்வு செய்யப் போகிறதா என்பதுதான் கேள்வி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.