தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்திடுக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

10 Jul 2026, 10:00 pm
பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்திடுக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்திடுக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 10- தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழி லாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென் னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் (சுதேசி போராளி த.வெள்ளையன் நினை வரங்கம்) சிவகாசி பட்டாசு விற்பனை சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் நா.கோவிந் ந்தராஜ் தலைமையில் வியாழனன்று (ஜூலை 9) நடைபெற்றது.

அவைத் தலைவர் ஆர்.பிரேம்நாத், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் எஸ்.எஸ்.கண்ணன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ, சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் எஸ்.சவுந்திர ராஜன், பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன், மாநில செயல் தலைவர் வியாசை எம்.மணி, மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, சிஐடியு நிர்வாகி ஆர்.லோக நாதன், ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் த.தன சேரகன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி கள் ஜி.ஆனந்தன், மகேஸ்வரன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளா ளர் நடராஜன், மோகன், ஜேபிஎம் பட்டாசு ஆலை உரிமையாளர் பா.ஜெயபால் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக உழைக்கும் மக்களின் நாளி தழான தீக்கதிருக்கு 5 ஆண்டு சந்தாவை தலைவர் நா.கோவிந்தராஜ் வழங்க எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். ஜெய் மாருதி ஏஜென்சிஸ் நிர்வாகி ஜெ.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

இதுகுறித்து தலைவர் நா.கோவிந்தராஜ் கூறுகையில், பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக தரமான பட்டாசுகள் மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவகாசியின் ஜேபிஎம் நிறு வன பட்டாசுகளை ஜெய்மாருதி ஏஜென்சி யுடன் இணைந்து பட்டாசுகளை விற்பனை செய்ய உள்ளோம்.

அதையொட்டி இலவச டெலிவரி உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் அளிக்கிறோம் என்று கூறினார்.

மேலும் பட்டாசு உற்பத்தியை பாதுகாப் பான முறையில் மேற்கொள்வதை அரசு நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விபத்து கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாக வசதிக்காக மாவட்ட ஆட்சி யர் அமைத்துள்ள வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை.

தீயணைப்புத் துறை, காவல் துறையினர், வட்டாட்சியர் உள்ளடக்கிய குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும்.

அது பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றார். ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி தரமற்ற பட்டாசுகள் விற்பனை செய்யும் போக்கையும் அதன் மூலம் நடைபெறும் பண மோசடிகளையும் தடுக்க அதற்கென தனியாக நெறிமுறை களை வகுக்க வேண்டும்.

தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ. பி.எப் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக சீனாவில் இருப்பதைப் போல் பாதுகாப்பாக பட்டாசு உற்பத்தி குறித்த பாடத்திட்டங்களை பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை மெட்ரோ எஃகு பாலம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை, ஜூலை 10- சென்னை மாநகரையும் அதன் தெற்குப் புறநகர்ப் பகுதிகளையும் நேரடியாக இணைக்கும் வகையில், ரேடியல் சாலை மேம்பால த்திற்கு மேலே பிரமாண்ட மான எஃகுப் பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிலோ மீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இந்தப் பாலம் மிக முக்கியப் பகுதி யாகும். இந்த வழித்தடத்தில் வரவிருக்கும் ஈச்சங்காடு மற்றும் கோவிலம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங் களுக்கு இடையே இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈச்சங் காடு மற்றும் கோவிலம் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் 2027 மார்ச் மாதத்திற்குள் பயன்பாட் டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எஃகுப் பாலம் செயல்பாட் டிற்கு வரும்போது, சென்னையின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளுக்கான மெட்ரோ இணைப்பு தடை யின்றி அமையும் என நம்பப் படுகிறது.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஜூலை 10- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,800-க்கு விற்பனை யாகிறது. 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ. 14,564 -க்கு விற்பனை செய்யப்ப ட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனையானது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.