பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்திடுக! பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
11 Jul 2026, 8:52 pm
<p><strong>பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்திடுக! பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 10- தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் (சுதேசி போராளி த.வெள்ளை யன் நினைவரங்கம்) சிவகாசி பட்டாசு விற்பனை சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் நா.கோவிந்தராஜ் தலை மையில் வியாழனன்று நடைபெற்றது. அவைத் தலை வர் ஆர்.பிரேம்நாத், பொருளாளர் செல்வகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் எஸ்.எஸ்.கண்ணன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்எல்ஏவும், சிஐடியு மாநில துணைத் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலை வர் எஸ்.சவுந்திரராஜன், பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன், மாநில செயல் தலைவர் வியாசை எம்.மணி, மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, சிஐடியு நிர்வாகி ஆர்.லோகநாதன், ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் த.தனசேரகன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜி. ஆனந்தன், மகேஸ்வரன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் நடராஜன், மோகன், ஜேபிஎம் பட்டாசு ஆலை உரிமையாளர் பா.ஜெயபால் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக உழைக்கும் மக்களின் நாளிதழான தீக்கதிருக்கு 5 ஆண்டு சந்தாவை தலைவர் நா. கோவிந்தராஜ் வழங்க எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். ஜெய் மாருதி ஏஜென்சிஸ் நிர்வாகி ஜெ. விக்னேஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நா.கோவிந்தராஜ் கூறுகையில், ”பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி யுள்ளோம். அதன் தொடர்ச்சியாக தரமான பட்டாசுகள் மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவகாசியின் ஜேபிஎம் நிறு வன பட்டாசுகளை ஜெய்மாருதி ஏஜென்சியுடன் இணை ந்து பட்டாசுகளை விற்பனை செய்ய உள்ளோம். அதை யொட்டி இலவச டெலிவரி உள்ளிட்ட சிறப்பு சலுகை களும் அளிக்கிறோம். பட்டாசு உற்பத்தியை பாது காப்பான முறையில் மேற்கொள்வதை அரசு நிர்வாகங் கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விபத்து கண்கா ணிப்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாக வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினர், வட்டாட்சியர் உள்ளடக்கிய குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி தரமற்ற பட்டாசுகள் விற்பனை செய்யும் போக்கையும் அதன் மூலம் நடைபெறும் பண மோசடி களையும் தடுக்க அதற்கென தனியாக நெறிமுறை களை வகுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ. பி.எப் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக சீனாவில் இருப்பதைப் போல் பாதுகாப்பாக பட்டாசு உற்பத்தி குறித்த பாடத்திட்டங்களை பள்ளிகளில் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.</p>
