அரசுப் பணி, நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர்கள் உறுதி! 4 நாட்களுக்குப் பின் சபரிவர்மன் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர்!
17 Jul 2026, 9:37 pm
<p><strong>அரசுப் பணி, நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர்கள் உறுதி! 4 நாட்களுக்குப் பின் சபரிவர்மன் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர்!</strong></p><p>ஆம்புலன்ஸை மறித்து பாஜக தகராறு நாகர்கோவில், ஜூலை 17 - நாகர்கோவில் சிறைக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சபரிவர்மன் உடலைப் பெற மறுத்து, அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சபரிவர்மன் குடும்பத் தினரை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச நிவாரணத்தை அறிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உறவினர்கள் வெள்ளிக்கிழமை மாலை சபரிவர்மன் உடலை பெற்றுக் கொண்டனர். முன்னதாக, சபரிவர்மன் உடலை ஏற்றிய ஆம்புலன்ஸை பாஜகவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொன். ராதா கிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் தடுத்து நிறுத்தி, நிவாரண உத்தரவுகளை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று தக ராறில் ஈடுபட்டனர். பாஜகவினரின் இந்த தக ராறால், மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் உடல், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சா லையை ஒட்டி ஆம்புலன்சில் ஐந்தாவது நாளாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.</p>
