சு. வெங்கடேசன் எம்.பி. தலையீட்டால் தீர்வு பி.எட். தேர்வு மையங்களை தமிழகத்திற்கு உள்ளேயே ஒதுக்கியது ஒன்றிய அரசு!
11 Dec 2025, 3:52 pm

சு. வெங்கடேசன் எம்.பி. தலையீட்டால் தீர்வு பி.எட். தேர்வு மையங்களை தமிழகத்திற்கு உள்ளேயே ஒதுக்கியது ஒன்றிய அரசு!

புதுதில்லி, டிச. 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலையீட்டைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘ஸ்வயம்’ (Swayam) எனப்படும் பி.எட். தேர்வுக் கான மையங்கள், தமிழ்நாட்டிற்கு உள்ளேயே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து, ஒன்றிய அமைச்ச ரின் நடவடிக்கைக்கு சு. வெங்க டேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட். மாணவர்களுக்கான ‘ஸ்வயம்’ (Swayam) தேர்வுகள் டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தன. குறிப்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூரு, மங்களூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யாத மையங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அது வும் பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநில நகரங்களில் - அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டின் கல்வியியல் கல்லூரி மாணவர்களால் ‘ஸ்வயம்’ தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய தேர்வு முகமையானது, தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கி தேசிய தேர்வு முகமை, புதிய தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கி உள்ளது. இதனால், இந்தத் தேர்வுக்காக அண்டை மாநிலங் களுக்கு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு, தேசிய தேர்வு முகமைக்கும், ஒன்றிய அமைச்ச ருக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி., வரும் காலங் களில் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டு மாண வர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கும் வகையிலான நடவடிக்கை களை மேற்கொள்ளக் கூடாது; கூடுதல் கவனத்துடன் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.