ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் சு.வெங்கடேசன் - ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தனர்!
29 Nov 2025, 4:58 pm
<p><strong>ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் சு.வெங்கடேசன் - ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தனர்!</strong></p>
<p>21 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் வெள்ளியன்று (நவ. 28) தொடங்கின. இதில், முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் ஒன்றை மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டிகளில் ஒன்றை திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மதுரை மாநகர காவல் (வடக்கு) துணை ஆணையர் அனிதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.</p>
