தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை கடவுள் தேவைப்படுகிறார் ஈரோட்டில் ச.தமிழ்ச்செல்வன் பேச்சு

27 Sept 2026, 11:53 pm
மக்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை கடவுள் தேவைப்படுகிறார் ஈரோட்டில் ச.தமிழ்ச்செல்வன் பேச்சு

மக்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை கடவுள் தேவைப்படுகிறார்

ஈரோட்டில் ச.தமிழ்ச்செல்வன் பேச்சு

ஈரோடு, செப்.27-மக்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார் என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில், ச.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், ‘மகரந்தம் வாசிப்பு’ நிகழ்வு ஈரோடு நாடக கொட்டகையில் சனியன்று மாலை நடைபெற்றது. சாகித்திய அகாதமி விருதாளர் ச.தமிழ்செல்வன் எழுதிய தெய்வமே சாட்சி புத்தகம் வாசிக்கப்பட்டது. இதன்பின் தமிழ்செல்வன் நிறைவுரையாற்றுகையில், உழைக்கிற மக்கள்தான் இந்த சமூகத்தை மாற்றுகிறவர்கள். அவர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கினால் தான் சமூகத்தில் மாற்றங்கள் நடக்கும். அதுதான் முன்புநடந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் நடக்கும். ஆனால், ஏன் உழைப்பாளி மக்கள் தெருவிற்கு வர முடியவில்லைஎன்றால், அவர்களுடைய மனம் நம்முடைய சித்தாந்தத்தோடு இல்லை. உழைக்கும் மக்களை யார் யாரோகண்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள்.

அதில் முக்கியமானது கடவுள்; மதம். அதிலிருந்து அவர்கள் விடுபடாமல் மக்கள் பொதுவான சமூக மாற்றத்திற்காக போராடவரமாட்டார்கள். அவர்கள் தெருவில் இறங்க விடாமல் தடுக்கின்ற சக்திகள் கடவுளும், மதமும். அவற்றை அவர்கள் நிஜம் என்ற நம்பி உள்ளனர். மதங்களின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால், அதன் வரலாற்றை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் காரல் மார்க்ஸ். எந்தவொரு கருத்து மக்களின் மனங்களை கவ்வி பிடிக்கிறதோ, அது பௌதீக சக்தியாக மாறும் என்றார் காரல்மார்க்ஸ். கடவுளும் மதமும் மக்களின் மனங்களை கவ்வி பிடித்து இருக்கிறது.

இந்தியாவில் பல மதங்கள் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களை இந்துக்கள் என்று

நம்புகிறார்கள். இந்து என்பது ஒரு மதம் கிடையாது. சைவம், வைண, வைதீகம் ஆகிய மூன்று மதங்கள் உள்ளன. இவற்றிற்கு சம்பந்தமில்லாத நாட்டார் தெய்வங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் சேர்த்து இந்து என்று சொல்லை வெள்ளைக்காரன் 1871ல் மக்கள் தொகை கணக்கெடுத்த போது போட்டான். கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை தங்கள் மதத்தை வளர்க்க பிரச்சாரம் செய்தனர். அதன் மூலம் பயணத்தை பின்பற்றி அரசர்களையும் மதம் மாற்றினர். சுடலை மாடன் சிவனின் அவதாரம் என்றும், காளியம்மாவை பார்வதியின் அம்சம் என்றார்கள். நாட்டுப்புற தெய்வங்களையெல்லாம் கபளீகரம் செய்தனர். தீக்குளித்து இறந்தவர்களை அம்மனாக்கி வழிபட்டனர். இவர்கள் சீதையின் அவதாரம், என்றனர். இந்துத்துவா வந்த பிறகு இந்த மாற்றம் வந்துள்ளது. மக்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை மனிதனுக்குகடவுள் தேவைப்படுகிறார்.

பெரியார் உட்பட நாத்திகர்கள் கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் செய்து வந்தனர். கடவுள் ஏன் தேவைப்படுகிறார் என்று கேள்வி எழுப்ப வேண்டும். மனிதனுக்கு உடல் ரீதியான தேவைகள் இருக்கிறது. அதேபோல மனரீதியான தேவைகளும் இருக்கிறது. கடவுள் இல்லாமல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கான பல வழிகள் உள்ளன. ஆனால் எல்லாம் அவன் செயல் என்கின்றனர். கடவுள் நம்பிக்கை என்பது மனித முயற்சிகளை கீழ்மைப்படுத்துகிறது. ஆக கடவுள், மதம் சார்ந்து ஏற்றி வைக்கப்பட்டுள்ள கருத்துகளை மாற்ற நாம் முதலில் படிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன், துணைத்தலைவர் சர்மிளா, நிர்வாகி வினிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.