தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமும் அழகியலும் இணைந்த எழுத்துக்கு சொந்தக்காரர் ச. தமிழ்ச்செல்வன்’-சிபிஎம் வாழ்த்து

16 Mar 2026, 4:46 pm
‘உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமும் அழகியலும் இணைந்த எழுத்துக்கு சொந்தக்காரர் ச. தமிழ்ச்செல்வன்’-சிபிஎம் வாழ்த்து
<p><strong>&lsquo;உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமும் அழகியலும் இணைந்த எழுத்துக்கு சொந்தக்காரர் ச. தமிழ்ச்செல்வன்&rsquo;-சிபிஎம் வாழ்த்து</strong></p> <p>சென்னை, மார்ச் 16 - &lsquo;தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்&rsquo; நூலுக்கு &lsquo;சாகித்ய அகாடமி&rsquo; விருது &nbsp;அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்- அந்நூலின் ஆசிரியரும், எழுத்தாளரு மான ச. தமிழ்ச்செல்வனுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. &nbsp;சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: தமுஎகச தலைவர்; &nbsp;&lsquo;செம்மலர்&rsquo; ஆசிரியர்! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரும், &lsquo;செம்மலர்&rsquo; ஆசிரியரு மான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப் பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாநில செயற்குழு வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக எழுதி வரும் தமிழின் சிறந்த எழுத்தாளரான ச. &nbsp;தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், கட்டு ரைகள், குழந்தை இலக்கியம் மட்டு மல்லாமல் இடதுசாரி அரசியல் சார்ந்த &nbsp;பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். &nbsp;&lsquo;விற்பனையில் சாதனை படைத்த அரசியல் எனக்குப் பிடிக்கும்&rsquo; &nbsp;லட்சக்கணக்கான பிரதிகள் விற்ப னையான இவரின் &lsquo;அரசியல் எனக்குப் &nbsp;பிடிக்கும்&rsquo; நூல், இடதுசாரி அரசியலை &nbsp;எளியோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டதாகும். &lsquo;ஜிந்தாபாத் ஜிந்தா பாத்&rsquo; நூல் ஒரு இலக்கியவாதியின் தொழிற்சங்க அணுபவத்தை சொல்லும் &nbsp;நூல் ஆகும். இந்த வரிசையில் சமீபத் தில் இவர் எழுத்தில் வெளிவந்த &ldquo;திருப்பியடித்த வரலாறு&rdquo; ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத் தின் நூற்றாண்டு கால வரலாற்றை 1000 பக்கங்களில் பதிவு செய்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகும். ச. தமிழ்ச்செல்வன் எழுத்தாளராக மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக &nbsp;மூன்று முறை செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களி லும் மார்க்சியக் கல்வியை எளிய மொழியில் வகுப்பெடுக்கும் சிறந்த ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பே &nbsp;வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய ஆட்சியிலுள்ள பாஜக-வின் அரசியல் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விருது பலரின் கண்ட னக் குரல்களுக்குப் பின் தற்போது வெளிவந்துள்ளது. தனது எழுத்தில் எப்போதும் உழைக் கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகி யல் குறையாமல் தொடர்ந்து எழுதி வரும் &nbsp;ச. தமிழ்ச்செல்வன், தற்போது விருது &nbsp;பெற்றுள்ள &lsquo;தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்&rsquo; நூலையும் அதே கண்ணோட் டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகை யில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு &nbsp;வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.