தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுகள் படைப்பின் தரத்தை தீர்மானிப்பதில்லை நூல் வெளியீட்டு விழாவில் ச.தமிழ்ச்செல்வன் உரை

19 Jul 2026, 10:51 pm
விருதுகள் படைப்பின் தரத்தை தீர்மானிப்பதில்லை  நூல் வெளியீட்டு விழாவில் ச.தமிழ்ச்செல்வன் உரை
<p><strong>விருதுகள் படைப்பின் தரத்தை தீர்மானிப்பதில்லை நூல் வெளியீட்டு விழாவில் ச.தமிழ்ச்செல்வன் உரை</strong></p><p>சென்னை, ஜூலை 19 - சிறார் இலக்கிய விமர்சன மரபை உருவாக்க வேண்டு மென்று எழுத்தாளர் ச.தமி ழ்ச்செல்வன் வலியுறுத்தி உள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘நான் பேச விரும்புகிறேன்’ நூலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு மற்றும் உரையா டல் நிகழ்வு நடைபெற்றது. தமுஎகச தென்சென்னை மாவட்டக்குழு நடத்திய இந்நிகழ்வில், வாசகர்கள் எழுப்பிய கேள்விகளின் வழி யாக தமிழ்ச்செல்வன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இலக்கியம், சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், “உலகத்தில் எந்த மொழி யுடனும் ஒப்பிட முடியாத சிறு கதை வரலாறு தமிழுக்கு உள்ளது. இளம் எழுத்தா ளர்கள் சிறுகதைகளை வாசிக்க தூண்ட வேண்டு மென்ற தேவையிலிருந்து, ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலை உழைத்து உருவாக்கினேன்” என்றார். “மறுவாசிப்பு என்பது புத்தகத்தை திரும்ப வாசிப்ப தல்ல. நூல்கள் ஆழமா னவை. முதலில் வாசித்த போது எந்த நிலையில் இருந்தோம், தற்போது எவ்வளவு மேம்பட்டு இருக்கிறோம் என்பதை எடைபோடுவதுதான் மறு வாசிப்பு. புத்தகம் வாங்க பணம் இல்லை, படிக்க நேரமில்லை என்பதெல் லாம் ஏமாற்று வேலை. “ஆணாதிக்க சமூகம் பெண்கள், குழந்தைகளை பற்றி கவலைப்படுவ தில்லை. பெண்கள் கண்டு பிடித்துள்ள நுட்பங்கள் இலக்கியமாக எழுத்து வடிவம் பெற வேண்டும். சாதி 3ஆயிரம் வருடமாகத்தான் உள்ளது. ஆனால், ஆணா திக்கம் 12ஆயிரம் ஆண்டு களாக உள்ளது. எனவே, ஆணாதிக்கத்திற்கு எதிராக அதிகம் குரல் கொடுக்கி றேன். தனக்கெதிராக பெண் களை தயார் படுத்துகிற வன்தான் சிறந்த ஆண்” என்று குறிப்பிட்ட அவர், “சிறார் இலக்கியம் வளர்ந்து வருகிறது. சிறார் இலக்கிய விமர்சன மரபையும் உரு வாக்க வேண்டும்” என்றார். “விருதுகளுக்கும் எழுத்தின் தரத்திற்கும் சம்பந்தம் இல்லை. விருது கள் படைப்பின் தரத்தை தீர்மானிப்பதில்லை. எழுத் தாளன் வாசகனை சஞ்சல ப்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்ட தமிழ்ச்செல்வன், “ஜல்லிக்கட்டிற்காக போரா டியது போன்று, அரசின் கல்விக் கொள்கைக்காகவும் போராட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வை பேரா. வெண்மணி ஒருங்கிணைத் தார். ‘நான் பேச விரும்பு கிறேன்’ நூலின் மூன்றாம் பதிப்பு வெளியிட்டு தமுஎ கச மதிப்புறு தலைவர் திரை க்கலைஞர் ரோகிணி பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.