ச.தமிழ்ச்செல்வனின் ‘‘திருப்பியடித்த வரலாறு’ நூல் வெளியீட்டு விழா
16 Feb 2026, 2:37 pm
<p><strong>ச.தமிழ்ச்செல்வனின் ‘‘திருப்பியடித்த வரலாறு’ நூல் வெளியீட்டு விழா</strong></p>
<p>எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘திருப்பியடித்த வரலாறு’ நூல் வெளியீட்டு விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நூலினை வெளியிட, திரைப்படக் கலைஞர் ரோகிணி முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலை அறிமுகம் செய்து பேசிய கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பாட்டாளி வர்க்கப் போராட்ட வரலாற்றை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ள விதம் குறித்து விளக்கினார். தொடர்ந்து மதிப்புரை வழங்கிய கே.பாலகிருஷ்ணன், நூல் ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வனை ‘பாட்டாளிகளின் படைப்பாளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்தார். நிறைவுரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி வரலாற்றை அறிய ஒவ்வொரு தோழரும் இந்நூலை வாசிக்க வேண்டும் எனவலியுறுத்தினார். முன்னதாக, எம்எல்ஏ-க்கள் நாகை வி.பி.மாலி, க.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் களப்பிரன் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ் நன்றி கூறினார். 1964 முதல் நடந்த போராட்டங்களை ஆவணப்படுத்த உதவிய மூத்த தோழர் எஸ். சேகர், முனைவர் ஜீ. வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.</p>
