திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக ச.கவிதா பொறுப்பேற்பு
1 Jun 2026, 11:48 pm
<p><strong>திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக ச.கவிதா பொறுப்பேற்பு </strong></p><p>சென்னை, ஜூன் 1- திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ச.கவிதா திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத் திட்டுத் தனது பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின் செய்தி யாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ச.கவிதா, மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதே தனது முதல் கடமை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்யப் போவதாகவும், பொதுமக்களின் குறை தீர்க்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>
