முழு அரசு மரியாதையுடன் ‘இசைப் பேரரசி’ ஜானகி உடல் தகனம்
12 Jul 2026, 9:03 pm

முழு அரசு மரியாதையுடன் ‘இசைப் பேரரசி’ ஜானகி உடல் தகனம்

மைசூரு, ஜூலை 12 - இந்திய சினிமாவின் பழம்பெரும் பின்னணிப் பாடகி, ‘இசைக் குயில்’ என புகழப்படும் எஸ். ஜானகி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் ஜூலை 11 ஆம் தேதி இரவு காலமானார். அவருக்கு வயது 88.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா, கான கோகிலா, இசை அரசி எனப் பல பட்டங்களில் புகழப்பட்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழி களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் களைப் பாடியுள்ளார்.

4 முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற இவர், 2013 ஆம் ஆண்டு தமக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை, தமது 55 ஆண்டு கால அனுபவத்திற்கு தாமதமாக வழங்கப்பட்டதாகக் கூறி ஏற்க மறுத்திருந்தார்.

பிறப்பும் திரையுலகப் பயணமும் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம், பள்ளபட்லா கிராமத்தில் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு, நாதஸ்வர மேதை பைடிசாமி யிடம் ஓராண்டு காலம் இசைப் பயிற்சி பெற்றார்.

மாமாவின் ஆலோசனையின் பேரில் சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பின்னணிப் பாடகி யாகத் தமது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பொதுமக்கள் அஞ்சலி- இறுதிச் சடங்கு ஜானகியின் உடல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திரளான ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலை வர்கள் ஆயிரக்கணக்கில் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த எஸ். ஜானகி அவர்களின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்துமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மைசூரின் புறநகரில் உள்ள கணியனகுந்தி பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு கள் நடைபெற்றன.

தமது வாழ்நாளின் இறுதிப் பகுதியை மைசூரிலேயே கழித்த ஜானகி, தம் உடலை மைசூரிலேயே தகனம் செய்ய வேண்டும் என விரும்பியிருந்ததால், அவரது விருப்பப்படி குடும்பத்தினரே இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இசைப் பேரரசி ஜானகி உடலுக்கு கர்நாடகா அரசு சார்பில் துப்பாக்கிக் குண்டு கள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.

தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் ஜானகியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய், கர்நாடக முதல் வர் சிவக்குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகை சிம்ரன், இசையமைப்பா ளர்கள் இளையராஜா, தேவா, அனிருத், சித்ரா, மனோ உள்ளிட்ட திரையுலகப் பிரமு கர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.