கடலூர் அருகே காகங்கள் அடுத்தடுத்து இறப்பு பறவைக் காய்ச்சலா பொதுமக்கள் அச்சம்
26 Feb 2026, 5:09 pm
<p><strong>கடலூர் அருகே காகங்கள் அடுத்தடுத்து இறப்பு பறவைக் காய்ச்சலா? பொதுமக்கள் அச்சம்</strong></p>
<p>கடலூர், பிப்.26- சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை, ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டுப் பறவைக் காய்ச்சலால் இறந்திருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவில் எச்5என்1 வைரஸ் தொற்று, அதாவது பறவைக் காய்ச்சல் ஏற்பட்டே இந்தக் காகங்கள் அனைத்தும் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகக் கால்நடைத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் அருகே உள்ள பெரியகங்கனகுப்பம் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான காகங்கள் குவியல் குவியலாக மயங்கி விழுந்து இறந்து கிடப்ப தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்ப வம் அந்த கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்து கிடக்கும் காகங்களைக் கோழிகள் கொத்தித் தின்கின்றன. பறவைக் காய்ச்சல் இருக்குமோ என அச்சம் எழுந்துள்ளதால், கால்நடைத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்த செய்திகள் வந்த நிலையில், பெரிய கங்கனகுப்பம் பகுதியில் காகங்கள் இறந்து கிடக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
