சு.வெங்கடேசன் எம்.பி. தலையீட்டால் தீர்வு இஸ்ரோ பொங்கலன்று அறிவித்திருந்த தேர்வு ரத்து!
9 Jan 2026, 3:41 pm
<p><strong>சு.வெங்கடேசன் எம்.பி. தலையீட்டால் தீர்வு இஸ்ரோ பொங்கலன்று அறிவித்திருந்த தேர்வு ரத்து!</strong></p>
<p>மதுரை, ஜன. 9 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஜனவரி 15 அன்று தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான (VSSC) தேர்வுகளை அறி வித்திருந்தது. ஜனவரி 15 - அன்று தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதால், இஸ்ரோ அறி விப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சு. வெங்கடேசன் எம்.பி., தேர்வுத் தேதியை மாற்றியமைக்குமாறு ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, சு. வெங்கடேசன் கோரிக் கையை ஏற்றுக் கொண்டு, தொழில்நுட்ப உதவி யாளர்கள் தேர்வை, இஸ்ரோ தள்ளி வைத்து உள்ளது. இதனை, தமது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., தேர்வர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p>
