முந்தய பக்கம்

வேளாண் பணி அனுபவம் பெற்ற ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

10 Jan 2026, 2:48 pm
வேளாண் பணி அனுபவம் பெற்ற ஆர்.வி.எஸ் வேளாண்மை  கல்லூரி மாணவர்கள்
<p><strong>வேளாண் பணி அனுபவம் பெற்ற ஆர்.வி.எஸ் வேளாண்மை &nbsp;கல்லூரி மாணவர்கள்</strong></p> <p>கும்பகோணம், ஜன.10- &nbsp;தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தை விவசாயிகளுடன், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு அங்கமாக சாக்கோட்டை இயற்கை விவசாயி கேசவராஜை சந்தித்துப் பேசினர். மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் நேரடி பயிற்சி, இயற்கை முறை விவசாய நிலத்தில் நேரடி பயிற்சியும், இயற்கை வேளாண்மை முறையில் களை செடி மற்றும் களைத் தாவரங்களை அகற்றுதல், கண்டறிதல், இயற்கை முறையில் நோய் மற்றும் பூச்சி தாக்கம், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையின் இடர்பாடுகள் குறித்தும், குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள், 60 நாள் பயிற்சிக்காக இங்கு வந்துள்ளதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram