தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் கியூபா சென்றடைந்தது ரஷ்ய கப்பல்! 60 ஆயிரம் டன் அரிசியை அனுப்பி சீனாவும் ஆதரவு

30 Mar 2026, 3:40 pm
7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் கியூபா சென்றடைந்தது ரஷ்ய கப்பல்! 60 ஆயிரம் டன் அரிசியை அனுப்பி சீனாவும் ஆதரவு
<p><strong>7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் கியூபா சென்றடைந்தது ரஷ்ய கப்பல்! 60 ஆயிரம் டன் அரிசியை அனுப்பி சீனாவும் ஆதரவு</strong></p> <p>ஹவானா, மார்ச் 30 - 7,30,000 பேரல் கச்சா எண்ணெய்யு டன் ரஷ்ய கப்பல் கியூபாவைச் சென்றடைந்தது. இதனை ரஷ்யாவின் &lsquo;இண்டர்ஃபேக்ஸ்&rsquo; (Interfax) செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் தடைகளால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், கியூபாவிற்கு உதவு வதற்காக இந்த எண்ணெய்க் கப்பலை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இக்கப்பலை கியூப மக்கள் ஆர வாரத்துடனும் வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சோசலிச கியூபாவை &nbsp;நிர்மூலமாக்க துடிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது முதல் கியூபா மீதான தடைகளை டிரம்ப் மிகவும் கடுமை யாக்கினார். குறிப்பாக கச்சா எண்ணெய்க் கான தடையை தீவிரப்படுத்தியதுடன் கியூபாவிற்கு எண்ணெய் அனுப்பும் எந்த நாடாக இருந்தாலும் அதன் மீது &nbsp;வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அமெரிக்க மிரட்டலையும் மீறி, கியூபாவிற்கு கச்சா எண்ணெய் கொடுத்து வந்த நட்பு நாடான வெனி சுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவை, ஜனவரி 3 அன்று வெனிசுலா விற்கு உள்ளேயே புகுந்து அமெரிக்க ராணுவம் கடத்தியது. இதனால், கச்சா எண்ணெய் வரும் அனைத்து வழிகளும் அடைபட்டு, கியூபா மோசமான நிலை மைக்கு எதிர்கொண்டு வருகிறது. மின்தடையால் மருத்துவ சிகிச்சைகளும் பாதிப்பு கியூபா முழுவதும் உற்பத்தி இன்றி &nbsp;நாடே தொடர் மின் தடையால் தவித்து வருகிறது. அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளைப் பராமரிக்க அந்நாட்டு மருத்துவமனைகள் திணறி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கவலை தெரிவித்துள்ளது. ஆனால், மார்ச் இரண்டாம் வாரம் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் &ldquo;கியூபாவை எப்படியாவது கைப்பற்று வேன், அந்த பெருமை எனக்குக் கிடைக்கும். நான் அந்நாட்டை &nbsp;என்ன வேண்டுமானாலும் செய்வேன்&rdquo; என கொக்கரித்தார். கியூபாவைச் சென்றடைந்த &lsquo;அனடோலி கொலோட்கின்&rsquo; இந்த சூழலில் தான், ரஷ்யா, சீனா, &nbsp;வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் சர்வ தேச சமூக அரசியல் செயல்பாட்டா ளர்கள் குழுவும் கியூபாவிற்கு ஆதர வாக கரம் நீட்டியுள்ளன. 7,30,000 பேரல் கச்சா எண்ணெய்யு டன், கியூபாவிலிருந்து சுமார் 3,000 கடல் மைல் தொலைவில் அட்லா ண்டிக் பெருங்கடலில் நிலை கொண்டி ருந்த &lsquo;அனடோலி கொலோட்கின்&rsquo; (Ana toly Kolodkin) எனும் கப்பலை கியூபாவிற்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல், மார்ச் 30 அன்று கியூபாவை அடைந்துள்ளது. &nbsp; தடைகளை விலக்கியதாக அமெரிக்கா திடீர் பசப்பு! முன்னதாக, கியூபா மீதான எண் ணெய்த் தடைகளை மார்ச் 29 அன்று &nbsp;டிரம்ப் சற்று தளர்த்தியதாக அமெரி க்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள் ளன. ரஷ்ய எண்ணெய்க் கப்பலைத் தடுக்க முடியாது என்ற நிலையில், அது &nbsp;தமக்கு அவமானமாகப் போய்விடும் என்பதால், டிரம்ப் முந்திக் கொண்டு இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரஷ்ய எண்ணெய்க் கப்பல் செல்வதற்கு முன்னதாக &ldquo;நமது அமெரிக்கா&rdquo; (Nuestra America) என்ற பெயரில் படகுக் குழு ஒன்று சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்கள், கியூப ஆதரவாளர்கள் மூலம் நிவார ணப் பொருட்களை வழங்கியது. 11 நாடுகளைச் சேர்ந்த 32 பயணிகளுடன் கிராண்மா 2.0 என பெயரிடப்பட்ட பட கில் உணவு, சூரிய ஒளித் தகடுகள் என 30 டன் மனிதாபிமான உதவிப் பொருட் கள் கியூபாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சீனத்தின் ஒருமைப்பாடு! சோசலிசக் கியூபாவிற்கு, மக்கள் &nbsp;சீனக் குடியரசும் 60,000 டன் அரிசியைக் கொடுத்துள்ளது. 2026 ஜனவரி மாதம் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் 80 மில்லி யன் டாலர் மதிப்பில் கியூபாவிற்கு உத வித் தொகுப்பு வழங்குவதாக அறிவித் திருந்தார். அதன் ஒரு பகுதியாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள கியூபா தூதரகம் இந்த நடவடிக்கை யை ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு என வும் &lsquo;கியூபா தனியாக இல்லை&rsquo; என்றும் கூறியுள்ளது. &nbsp;சூரிய எரிசக்தி உற்பத்திக்கு கியூபாவிற்கு உதவுவதாகவும் சீனா ஏற்கெனவே தெரிவித்துள்ளது. &nbsp;கியூபாவை ஆக்கிரமிப்பேன் என &nbsp;டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலை யில் கியூபாவின் இறையாண்மைக்கு சீனா உறுதுணையாக நிற்கும். அந்நாட்டின் மீதான வெளிநாடுகளின் தலையீடுகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என சீன வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர் பாளர் மாவ் நிங் தெரிவித்துள்ளார். இவை ஒருபுறமிருந்தாலும், கியூப மக்களின் எதிர்கொண்டுவரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, கியூப ஜனாதிபதி மிகுயெல் தியாஸ் கானல் தலைமையிலான அரசு, டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.