தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

22 Mar 2026, 4:19 pm
சென்னை விரைவு செய்திகள்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தாய், மகள் பலி

சென்னை, மார்ச் 22-  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வேர்க்காடு பகுதியில், சாலையில் நின்றிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய்,மகள் உயிரிழந்தனர். கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த ராஜகுமாரி (55) மற்றும் அவரது மகள் ஜெயபிரசாந்தி (37) ஆகியோர், சிறுமி ராகவர்ஷினியுடன் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேர்க்காடு அருகே நிலைதடுமாறி லாரியின் பின்புறம் மோதியதில், பலத்த காயமடைந்த ராஜகுமாரி, ஜெயபிரசாந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சிப்காட் காவல்துறையினர், உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக சிறுமி ராகவர்ஷினி உயிர்தப்பினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.30 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது வழக்கு

சென்னை, மார்ச் 22-  சென்னையில் கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி, சுமார் ரூ.30 கோடி வரை மோசடி செய்த ‘டைகூன் ஃபின்டெக்’ நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஜான் சார்லஸ் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாதம் 15% முதல் 20% வரை லாபம் தருவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்ற இந்நிறுவனம், வாக்குறுதிப்படி வட்டியையோ அல்லது அசல் தொகையையோ திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியும் இந்நிறுவனம் பதிலளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் போதைப்பொருள், தங்கம், ரொக்கம் பறிமுதல்

சென்னை, மார்ச் 22-  சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னை வரும் ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், போதைப்பொருள் மற்றும் கணக்கில் வராத தங்கம், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.98 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.13.16 லட்சம் மதிப்புள்ள 94 கிராம் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஏ.தனிகைவேல் என்பவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருவொற்றியூர் - எண்ணூர் இடையே வந்த திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமையாளர் இன்றி இருந்த 4 பைகளிலிருந்து ரூ.12.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை மேலதிக நடவடிக்கைக்காக தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 லட்சம் டன் கச்சா எண்ணையுடன் சென்னை வந்தடைந்த ரஷ்யகப்பல்

சென்னை, மார்ச் 22- ரஷ்யத் துறைமுகத்திலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணையுடன் ஒரு சரக்குக் கப்பல் இன்று சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஈரானின் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னைத் துறைமுக அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சென்னைத் துறைமுகத்தில் 6.50 லட்சம் டன் கச்சா எண்ணை கையிருப்பில் உள்ளது. இன்று வந்துள்ள கப்பலைத் தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி மேலும் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணையுடன் அடுத்த கப்பல் வரவுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் இரண்டு கப்பல்கள் வரவுள்ளதால், கச்சா எண்ணை விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.

வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி: சென்னை மக்கள் சிரமம்

சென்னை, மார்ச் 22- சென்னையில் முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பித்த வாக்காளர்கள், பல மாதங்களாகியும் தங்களுக்கான புதிய அடையாள அட்டைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமில்லை என்றாலும், பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற இதர அரசு ஆவணங்களுக்கு முகவரிச் சான்றாக அசல் அட்டை தேவைப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் தபால் நிலையங்களுக்கு அலைந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை எனப் புகார் தெரிவிக்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதிலும் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர், தற்போது 17,000 வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் தபால் மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஓசி

கிளாஸ் தர மறுத்த கடைக்காரருக்கு வெட்டு

திருவள்ளூர், மார்ச் 22-  திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் மது அருந்த ஓசி கிளாஸ் தர மறுத்த மளிகை கடைக்காரரை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாமரைப்பாக்கம் காலனியில் மளிகை கடை நடத்தி வரும் ரவி (51) என்பவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (20) என்ற ரவுடி மது அருந்த பிளாஸ்டிக் கிளாஸ் கேட்டுள்ளார். ரவி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜா, மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வெங்கல் போலீசார், தலைமறைவாக இருந்த ராஜாவைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.