தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அலை அலையாய்... பேரலையாய் எழும் புரட்சி... - ச. லெனின்

1 hour before
அலை அலையாய்... பேரலையாய் எழும் புரட்சி... - ச. லெனின்

அலை அலையாய்... பேரலையாய் எழும் புரட்சி... - ச. லெனின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், 2025 நவம்பர் 2 முதல் 8 வரையிலான ஒரு வாரத்தைக் ‘கம்யூனிச எதிர்ப்பு வாரமாக’ அறிவித்திருந்தார். இந்த ஆண்டும் நவம்பர் 1 முதல் 7 வரையிலான வாரத்தை அவ்வாறே அறிவித்துள்ளார். நவம்பர் 7 – ரஷ்யப் புரட்சி தினத்தைக் கருத்தில் கொண்டே டிரம்ப் இந்தத் தேதிகளைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “எனது தலைமையின் கீழ் அமெரிக்கா ஒருபோதும் இந்தத் தீய கொள்கைகளுக்கு இரையாகாது; ஒருபோதும் கம்யூனிச நாடாக மாறாது” என்று அவர் பேசியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம், இடைக்காலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “முதல், இரண்டாம் உலகப் போர்கள், பேர்ல் ஹார்பர் தாக்குதல், 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களைவிட கம்யூனிசமே அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்; அமெரிக்கச் சுதந்திரத்துக்கு அது மரண அச்சுறுத்தல் (a mortal threat to American liberty). எனவே அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கு (Democratic Socialists of America) வாக்களிக்காதீர்கள்” என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனநாயக சோசலிஸ்டுகள் 8 பேர் இத்தேர்தலில் வென்றுள்ளனர்; மேலும் சிலர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்துள்ளனர். பிரதிநிதிகள் சபை, செனட் என இரு அவைகளிலும் டிரம்ப்பின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

கம்யூனிசத்துக்கு எதிரான டிரம்ப்பின் வார்த்தைகளும், ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாக்கியங்களை நம் கண்முன் நிறுத்துகின்றன. “ஒரு பூதம் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கிறது – கம்யூனிசம் எனும் பூதம்”, “கம்யூனிஸ்ட் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும்” என்று 1848இல் மார்க்சும் எங்கெல்சும் எழுதியவை, இன்று ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகையே சுட்டி உயிர்பெற்று நிற்கின்றன.

உலகுக்கு ஒரு செய்தி

டிரம்ப்பின் தோல்வி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் தோல்வி, கடும் நெருக்கடிகளுக்கிடையே பிரேசிலில் லூலாவின் வெற்றி ஆகியவை வெறும் உலகச் செய்திகள் அல்ல; அவை உலகுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றன.

2026 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்ற (நெசெட்) தேர்தலில், 120 இடங்களில் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று, ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை இழந்தது. 2022 தேர்தலில் அக்கூட்டணி 64 இடங்களைப் பெற்றிருந்தது. முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும், அரபுக் கட்சிகள் 19 இடங்களையும் பெற்றுள்ளன. இவை இணைந்து ஆட்சி அமைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடக்கும்; அது நேதன்யாகுவுக்கே வாய்ப்பாகிவிடும் என்று இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. போர், இனவெறி என மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத் திட்டங்களுக்குத் துணைநின்ற நேதன்யாகுவின் தோல்வி, ஏகாதிபத்திய ஆதிக்க அரசியலுக்கு எதிரானதே.

பிரேசிலில் லூலாவின் வெற்றி

லத்தீன் அமெரிக்காவில் நிலவும் அரசியல் போக்கிலிருந்து பிரேசிலில் லூலாவின் வெற்றி மாறுபட்டது. அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல்களில், அமெரிக்கா ஆதரிக்கும் வலதுசாரி வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்து, அவர்களின் வெற்றிக்கு டிரம்ப் வேலை செய்தார். அந்நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க இடதுசாரி ஆட்சியாளர்களை வீழ்த்தி வலதுசாரிகளை வெற்றிபெறச் செய்கிறார். கொலம்பியா, ஹோண்டுராஸ் ஜனாதிபதித் தேர்தல்களில் வென்ற வலதுசாரி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார்; அங்கெல்லாம் இன்று பழமைவாதத் தலைவர்கள் ஆட்சியில் உள்ளனர்.

லூலாவின் போட்டியாளரும், முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சனாரோவின் மகனுமான ஃபிளாவியோ பொல்சனாரோவுக்கு ஆதரவாக டிரம்ப் தரப்பில் மறைமுகமாகப் பல வேலைகள் நடந்ததைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் லூலாவின் பிரச்சாரங்கள் மறைக்கப்பட்டு, பொல்சனாரோவுக்குக் கூடுதல் விளம்பரம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்ட வலதுசாரி முயற்சிகளில் பிரேசில் நீதிமன்றம் தலையிட்டு ஓரளவு கட்டுப்படுத்தியது. பாதுகாப்பு, இயற்கை வளம், வர்த்தகம் ஆகியவற்றில் அமெரிக்கக் கொள்கைகளை ஆதரிக்கும் தலைவர்களையே டிரம்ப் நிர்வாகம் விரும்பியது. லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடும், இயற்கை வளமும் பொருளாதார வளமும் மிக்க நாடுமான பிரேசிலில் இடதுசாரியான லூலாவின் வெற்றி அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு.

ஏகாதிபத்தியச் சதிகளால் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்த லூலா, இரண்டாம் சுற்றில் தீவிர நேரடிப் பிரச்சாரத்தால் வென்றார். தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஏழை எளிய உழைக்கும் மக்கள் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரமே இதற்கு முக்கியக் காரணம். ஏகாதிபத்தியத்தின் கையிலிருந்த சமூக ஊடகங்களைக் கடந்து, வீதிகளில் நடந்த போராட்டங்களும், தெருவெங்கும் முழங்கிய கோஷங்களும் அவரது வெற்றிக்கு வழிவகுத்தன.

தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி...

தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, உலகெங்கும் நடைபெறும் எழுச்சிகளும் போராட்டங்களும் உலகை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கின்றன; உழைக்கும் மக்களுக்கு உத்வேகம் தருகின்றன. பிரான்சில் நடைபெற்ற மாணவர் போராட்டம் அத்தகையதே. “நெரிசலான வகுப்பறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமை, பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் எனும் நிலையை மாற்று; சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கல்வி நிதியை வெட்டாதே; அமெரிக்காவுக்கு அடிபணிந்து போர்களுக்கும் ஆயுதங்களுக்கும் நிதி ஒதுக்காதே” என்ற முழக்கங்களால் பிரான்ஸ் அதிர்ந்தது. ஆசிரியர்கள், தொழிலாளர்களின் பங்கேற்போடு அது இன்று பொதுத்துறை ஊதிய முடக்கம், அரசுச் செலவினக் குறைப்புக்கு எதிரான பரந்த போராட்டமாக உருவெடுத்துள்ளது.

பிரான்சைத் தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், அல்பேனியா எனப் போராட்டங்கள் நீள்கின்றன. கல்வி, வேலை, சுகாதாரம், குடியிருப்பு என மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உத்தரவாதம் செய்த சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது, சோசலிசம் தோற்றுவிட்டது என்று முதலாளித்துவம் கொண்டாடியது. எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் முதலாளித்துவத்தால்தான் உத்தரவாதப்படுத்த முடியும் என்றனர். சரி, முதலாளித்துவம் எங்கே வென்றுள்ளது? வாய்ப்புகளும் வசதிகளும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்கிறது எதார்த்தம்.

துன்பமும் அழிவும் நிறைந்த முதலாளித்துவம்

துன்பம், வறுமை, சுரண்டல், வன்முறை, ஒடுக்குமுறை ஆகியவையே முதலாளித்துவத்தின் உள்ளடக்கம். அதனால்தான் உலகெங்கும் நடைபெறும் போராட்டங்கள், கல்வி, வேலை, மருத்துவம், விலைவாசி, வேலை நேர உயர்வு, வீட்டு வாடகை என வாழ்வாதாரப் போராட்டங்களாகவே நடக்கின்றன. இவை முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வியைக் காட்டுகின்றன. அரசுகள் மீதிருந்த கடைசித் துளி நம்பிக்கையும் அற்றுப்போய், மக்கள் தங்கள் மீதே நம்பிக்கை கொண்டதன் வெளிப்பாடாகவே போராட்டங்கள் எழுகின்றன.

உலகெங்கும் ஆட்சியாளர்கள் போராட்டங்களை ஒரே மாதிரிதான் கையாளுகின்றனர்; ஒடுக்குமுறையே அவர்களின் மொழி. இந்தியாவிலும் அப்படியே; கிளர்ச்சிக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ஓயாத அலைபோல் எழும் போராட்டங்களை லத்திகளாலும் பூட்சுகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் தடுத்துவிட முடியாது; ஒடுக்க ஒடுக்க அவை பேரலையாக எழுகின்றன.

நவம்பர் புரட்சியின் வழிகாட்டல்

“தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்புமுறைகளுக்கு எதிரான ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர்” என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை. கிளர்ச்சிகள் புரட்சிகளுக்கு அடித்தளமிடுகின்றன. துன்பமும் அழிவும் நிறைந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்கு உண்மையான மாற்று சோசலிசமே. சீனா, கியூபா, வியட்நாம் உள்ளிட்ட சோசலிச நாடுகள் அதை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. பாரீஸ் கம்யூனின் அனுபவமும் படிப்பினையும் சோவியத் ரஷ்யாவை வழிநடத்தியதுபோல், நவம்பர் புரட்சியும் அதன் படிப்பினைகளும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கே வழிகாட்டுகின்றன.

கடந்த நூற்றாண்டைப் புரட்சிகளின் நூற்றாண்டு என்போம். சோவியத் ரஷ்யா தன் புரட்சியின் மூலம் அந்த நூற்றாண்டைத் தொடங்கிவைத்து, உலகுக்கு ஒரு செய்தியைச் சொன்னது; அதன் தாக்கம் உலகெங்கும் எதிரொலித்தது. அதேபோல், இன்றைய உலகின் நெருக்கடிகளும், போராட்டங்களும், எழுச்சிகளும், ஒடுக்குமுறைகளும் நவம்பர் புரட்சியின் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.