தீக்கதிர் உலக செய்திகள்
5 Aug 2026, 9:14 pm

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 17 பேர் பலி, பலர் காயம்

ரஷ்யாவின் மாஸ்கோ மாகாணத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மிகக்கடுமையானதாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரஷ்யா ஏவிய ஏவுகணைகள்எதையும் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. மிகக்குறைந்த நேர இடைவெளியில் அதிக பாலிஸ்டிக் ஏவுகணைகளை தொடர்ச்சியாக ஏவி ரஷ்யா தாக்குதல்நடத்துவதால் உக்ரைன் ராணுவத்தின் வலுவற்ற வான்பாதுகாப்பு அமைப்புகளால் எதிர்கொள்ள முடியவில்லை எனகூறப்படுகிறது.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு ஆப்கானிஸ்தானில் தீவிரமடைகிறது

ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அபாயகரமானநிலையை எட்டியுள்ளது என ஐ.நா உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக உணவு விநியோகம்மற்றும் பிற உதவிகள் குறைக்கப்படுவதால் இந்த நிலைமை மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் இந்நெருக்கடி காரணமாககுழந்தைகள் மரணமடையும் அளவு அதிகரிக்கும். இதனைத் தடுக்க உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும்ஐநா அழைப்பு விடுத்துள்ளது. உதவிகள் குறைக்கப்பட்டதால் 2025 இல் 142 சுகாதார மையங்கள் மூடப்பட்டது.இதனால் 13,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

மனித மனங்களை உலுக்கிய இறுதி நிகழ்ச்சி இஸ்ரேல் எனும் மிருகத்தால் படுகொலையானவர்களின் உடல்கள் 3 ஆண்டுக்குப்பின் அடக்கம்

காசா,ஆக.5-ஆகஸ்ட் 4, செவ்வாய்க்கிழமையன்று, காசா நகரத்தின் சப்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஒன்றுகூடிக் கண்ணீர் மல்க 112 பேருக்கு இறுதி விடை கொடுத்தனர். அல்-ஹசைனேமற்றும் அபுஷரியா ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் இஸ்ரேல் எனும் கொடூர மிருகத்தின் தாக்குதல்களால் 2023 நவம்பர் 23 அன்று படுகொலை செய்யப்பட்டனர். ஒரே உறவுமுறையைச் சேர்ந்த இந்த குடும்ப உறுப்பினர்கள் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்களின்குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர்கள் அனைவரும் மிக அகோரமான முறையில்படுகொலையாகினர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் இக்குடும்பத்தினர் மட்டுமின்றி மொத்தம் 308 பேராவது படுகொலையாகி இருக்கலாம் என கணிக்கப்பட்டது. இருப்பினும் தாக்குதலுக்குப் பிறகு மீட்புப்பணிக்கான போதிய உபகரணங்கள் இல்லாததாலும் சுமார்136 மணி நேரம் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்கு இடையேத்தேடியும் தோண்டியும் கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதியளவிலான உடல்கள்தான் எடுக்கப்பட்டன.அதிலும் உடல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. குண்டு வீச்சால் பிய்ந்து, சிதறி போனமற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சிதைந்து போன குழந்தைகள்,பெண்கள், முதியோர்களின் கைகள், கால்கள் என தனித்தனியாக உடல் பாகங்களைத் தான் மீட்புக் குழுவினரால்மீட்க முடிந்தது.

அப்படி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 112 பேர்களின் உடல்கள் தான் ஆகஸ்ட் 4 அன்று சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே இப்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 40 குழந்தைகள், 38 பெண்கள், 7 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மீதமுள்ள 157 உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாலஸ்தீன சிவில் பாதுகாப்புஅமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் மிக சக்தி வாய்ந்த குண்டுகளை வீசிப்படுகொலை செய்ததால் சில பாலஸ்தீனர்களின் உடல்கள் கான்கிரீட் மற்றும் இரும்புக்கம்பிகளோடு ஒன்றாக உருகிப் போயிருக்கலாம் அல்லது சிதைந்து அழிந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட கூட்டு இறுதிச்சடங்குகளில் இதுவே மிகப்பெரிய இறுதிச்சடங்கு என கூறப்படுகிறது. தற்போது போர் நிறுத்தம் என சொல்லப்பட்டாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துபாலஸ்தீனர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும்மீட்புக் குழுவினரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணிகளை செய்யவிடாமல் தடுத்துவருகிறது.

கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக, இஸ்ரேல் ராணுவத்தால் காசாவில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படுகின்ற கொடூர படுகொலைகளைஎதிர்கொள்வதுமட்டுமின்றி, கொலை செய்யப்பட்ட தங்கள் அன்புக்குரிய மனிதர்களின் சடலங்களையோ, உடல் பாகங்களையோக்கூட மீட்க முடியாமல் பாலஸ்தீனர்கள் மன ரீதியாக தவித்து வருகின்றனர்.தற்போது மூன்று ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உடல்கள்அடங்கிய சவப் பெட்டிகளை திறந்த வெளியில் வைத்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் வெளியாகி பார்க்கும் மனித மனங்களைஉலுக்கி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பாலஸ்தீனர்களை படுகொலைசெய்வது சாதாரணமாகிவிட்டது. இஸ்ரேல் இதுபோன்றஅநீதிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது, சர்வதேச சமூகம் எதுவுமே செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்று சமூகஊடகங்களில் இந்த காட்சிகளை பதிவிட்டுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.