தீக்கதிர் உலக செய்திகள்
9 May 2026, 9:42 pm

கூலிப்படைகள் மூலம் சூடானில் இனப்படுகொலை

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. துணை ராணுவத்தின் தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் அத்துணை ராணுவத்தின் இனப்படுகொலைகளுக்கு உதவி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் கொலம்பியக் கூலிப்படையினருக்குப் பணம் வழங்கியுள்ளதாக மோதல் நுண்ணறிவு குழு நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கொலம்பியக் கூலிப்படையினரின் அலைபேசித் தரவுகள் மூலம் இந்த தொடர்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் : பொதுமக்கள் படுகொலை

லெபனான் உடனான போர் நிறுத்தத்தை மீறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துகிறது. தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒரு மீட்புப் படை வீரர், பொதுமக்கள் உட்பட இருபது பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் தெற்கு லெபனானில் மட்டும் மொத்தம் 50 பேர் படுகொலை செய்யப்பட்டதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் மக்களை மீண்டும் வெளியேற்றும் படி இஸ்ரேல் ராணுவம் மிரட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பதற்றம்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா அத்துமீறி ராணுவக் கப்பல்களை அனுப்பியதால் மீண்டும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உருவாக்கி வருகிறது என பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 101 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட மிக மோசமான வன்முறைச் சம்பவம் இதுவாகும்.

ஆசியான் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை வலுப்படுத்தத் திட்டம்

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர்களால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்தவும், பிராந்திய உணவுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் அந்நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அறிவித்துள்ளார். 48 ஆவது ஆசியான் உச்சிமாநாட்டின் நிறைவில் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும், ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா இடைத்தேர்தல் : தீவிர வலதுசாரிக்கட்சி வெற்றி

கான்பெரா,மே 9- ஆஸ்திரேலிய நாட்டின் ஃபேரர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஒன் நேஷன்’ வெற்றி பெற்றுள்ளது. அந்நாட்டு நாடாளு மன்றத்தின் கீழ் சபையில் அக்கட்சி ஓர் இடத்தைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். அக்கட்சியின் வேட்பாளர் டேவிட் ஃபார்லி (David Farley) 40 சதவீதத்திற் கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னுரிமை வாக்கு களின் அடிப்படையில் அவர் சுமார் 9 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 1949 இல் இத்தொகுதி உருவாக் கப்பட்டதிலிருந்து, லிபரல் அல்லது தேசிய கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில் இக்கட்சிக ளை சேராத ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. 2025 பொதுத் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த லிபரல் கட்சி, இந்த இடைத்தேர்தலில் வெறும் 11.47 சதவீத வாக்குகளுடன் பின்னடைவைச் சந் தித்துள்ளது. நேஷனல் கட்சியோ 9.59 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த இரு கட்சிகளும் தங்களது ‘விருப்பத்தேர்வு வாக்குகளை’ (Prefer ences) ‘ஒன் நேஷன்’ கட்சிக்கு வழங் கியதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் மூன்று நாள் இடைக்காலப் போர் நிறுத்தம்

மாஸ்கோ,வாஷிங்டன், மே 9- ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே மூன்று நாள் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள தாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள் ளார். இந்த போர்நிறுத்தம் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகப் போர் வெற்றி தினம்

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படைகளை ஸ்டாலின் தலைமையிலான செம்படை வீழ்த்திய தினமான மே 8 வெள்ளிக் கிழமை அன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் ஒரு பதிவை வெளியிடார். அதில் “மே 9 முதல் 11 வரையிலான மூன்று நாட்களுக்கு “ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தை ரஷ்யா கொண்டாடும் தினத்தன்று வெளியான இந்த அறிவிப்பை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி யுடன் வரவேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுக ளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை முடி வுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா வின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மூன்று நாள் போர்நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறி யுள்ளார்.

தூதரக ரீதியான முயற்சிகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் இது குறித்துக் கூறுகையில், “அமெரிக்க நிர்வாகத்துடனான தொலைபேசி உரையாடல்களின் போது இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதேபோல், அமெரிக்கப் பிரதிநிதிகள் உக்ரைன் உடனும் தொடர்பில் இருந்தனர்,” என்றார். சமீபத்தில் புடின் மற்றும் டிரம்ப்புக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த உரையாடலில், இரண்டாம் உலகப் போரின்போது இரு நாடுகளும் ஒரே அணியாக நின்றதை அவர்கள் நினைவு கூர்ந்ததுடன், ‘இரண்டாம் உலகப் போர் வெற்றி தின’ (Victory Day) கொண்டாட்டங்க ளின் போது போர்நிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர். இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ஏற்கெனவே ரஷ்யா இரண்டு நாள் தங்கள் நாடு போர் நிறுத்தம் செய்யும் என அறிவித்திருந்தது. எனினும் போர் நிறுத்தக்கோரிக்கையை நானே நேரடியாக விடுத்தேன், என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்த ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

கைதிகள் பரிமாற்றம்

இப்போர்நிறுத்தத்தின் போது அனைத்து விதமான ராணுவத் தாக்குதல்களும் நிறுத்தப் படும். இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரி மாறிக்கொள்ளும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த கைதிகள் பரிமாற்றத்தை ஜெலன்ஸ்கியும் உறுதிப்படுத்தினார். “போரை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. நாம் ஒவ்வொரு நாளும் வெற்றியை நெருங்கி வரு கிறோம். இது நீண்ட, பயங்கரமான மற்றும் கடுமையான போரின் முடிவிற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றும் டிரம்ப் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரு வேன் என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார். இருப்பி னும், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், போர் நிறுத்தத்தை கொண்டு வர முடியாமல் டிரம்ப் திணறி வருகிறார். கடந்த சில மாதங்களாக அமைதிப் பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ருஸ்தெம் உமெரோவ், அமெரிக்கப் பிரதிநிதி களுடன் தொடர் சந்திப்புகளை நடத்த மியாமி வந்து சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழ மை தெரிவித்தனர். இந்த இடைக்காலப் போர்நிறுத்தம் “மிக நீண்ட போரின் முடிவிற்கான தொடக்கமாக” அமை யும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.