முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

17 Nov 2026, 11:12 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைன் மீது கடும் தாக்குதல் : ரஷ்ய அமைச்சகம் தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ ஆயுத உற்பத்தி மையங்கள், போக்குவரத்து மற்றும்எரிசக்தி உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் மிகப்பெரிய அளவில்நீண்ட தூர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், சப்போரிஷியா, செர்காசி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஆகியபிராந்தியங்களைக் குறிவைத்து இரவு முழுவதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு காவல்படை கலைப்பு :மம்தானி அதிரடி

நியூயார்க் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் பிரிவு கலைக்கப்படுவதாக நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி அறிவித்துள்ளார். காசா போருக்கு எதிராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றமாணவர் போராட்டங்கள், கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது ​போராட்டக்காரர்கள் மீது இந்த காவல் துறைபிரிவு கொடூரமான வன்முறைகளை ஏவி வந்தது. ​காவல்துறை சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப்பார்க்கப்படும் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram