ரஷ்யா தாக்குதலில் இந்தியர் உட்பட 12 பேர் பலி
1 Sept 2026, 8:23 pm

ரஷ்யா தாக்குதலில் இந்தியர் உட்பட 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 12 பேர் கொல்லப் பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் 51 பேர் இறந்துவிட்டதாகவும், 139 பேர் விடுவிக்கப்பட்டு தாயகம்திரும்பும் நடைமுறையில் இருப்பதாகவும் இந்திய அரசு திங்கட்கிழமையே தெரிவித்திருந்தது. செய்தியாளர்சந்திப்பின் போது பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.எஞ்சியுள்ள இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவித்து இந்தியா அழைத்து வருவது தொடர்பாக ரஷ்யாவுடன்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.