ரஷ்ய-ஆப்பிரிக்கா உச்சிமாநாடு
30 Oct 2026, 9:15 pm

ரஷ்ய-ஆப்பிரிக்கா உச்சிமாநாடு

மாஸ்கோ, அக்.30-வர்த்தகம், இறையாண்மை மற்றும் அமைதி ரஷ்ய-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் விவாதிக்க ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கூடியுள்ளனர்.

மேற்குலக நாடுகளின் மிரட்டல்கள் தடை எச்சரிக்கையையும் தாண்டி இந்த மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு முன்னதாக ஆப்பிரிக்க நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மரியா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 28-29 தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் புருண்டி ஜனாதிபதி எவாரிஸ்ட்டே ஆகியோர் இந்த உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரஷ்யா- ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான பாதையைஅமைக்கும் என தெரிவிக்கப்

பட்டுள்ளது. இதற்கு முன்பு 2019மற்றும் 2023 இல் இந்த உச்சிமாநாடுகள் நடைபெற்றன.

ஜிம்பாப்வே, மாலி, மொசாம்பிக், காங்கோ குடியரசு, கானா, உகாண்டா,புர்கினா பாசோ, நைஜர், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இரு தரப்புக்கும் இடையிலான வளர்ச்சி, நிதி, உணவுப் பாதுகாப்பு, தொழில்நுட்ப சுதந்திரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. டாலர் மற்றும் யூரோ ஆதிக்கத்தைக் குறைப்பது குறித்தும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடனானதொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

உர விநியோகம், விவசாயத்திற்கான இயந்திரங்கள், எகிப்து, எத்தியோப்பியா, ருவாண்டா போன்ற நாடுகளில் அணுஉலை திட்டங்களான அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு, ஆப்பிரிக்காவில் இணையம் மற்றும் இணையவழிப் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரம் குறித்தும் முக்கிய விவாதத்தை பெற்றுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் கனிம வளங்களைச் சொந்த நாட்டிலேயே சுத்திகரிக்கவும், எரிசக்தி மற்றும்தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்ளவும் விரும்புகின்றன. 2019 இல்16.8 பில்லியன் டாலராக இருந்த ரஷ்யா-ஆப்பிரிக்கா இடையேயான வர்த்தகம்,2025-ல் 27.1பில்லியன் டாலராகஉயர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், புதிய வர்த்தக வழிகளையும் கட்டண முறைகளையும் இந்த இரு தரப்பும் கண்டறிந்து வருகின்றன.