தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூபாவுக்கு ‘கைகொடுக்கும் ரஷ்யா’ ; ‘ஒளி கொடுக்கும் சீனா’

20 Mar 2026, 2:55 pm
கியூபாவுக்கு ‘கைகொடுக்கும் ரஷ்யா’ ; ‘ஒளி கொடுக்கும் சீனா’

கியூபாவுக்கு ‘கைகொடுக்கும் ரஷ்யா’ ; ‘ஒளி கொடுக்கும் சீனா’

ஹவானா, மார்ச் 20 - அமெரிக்காவின் தடைகளால் கியூபாவில் பெரும் எரிபொருள் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கியூபாவிற்கு கைகொடுக்கும் வகையில் ரஷ்யா 7,30,000 பேரால் கச்சா எண்ணெய்யை டெஸ்ட்ராயர் (Destroyer) வகை போர்க்கப்பலின் பாது காப்புடன் அனுப்பியுள்ளது.  கியூபா தனது பெட்ரோலியத் தேவையில் 40 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை ரஷ்யா, மெக்சிகோ மற்றும் வெனிசுலாவிலிருந்து பெறப்படுகின்றன.  2026 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்கா கடத்தியது. அதனைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் கியூபா மீதான எண்ணெய் தடையை மேலும் கடுமையாகியது. இதனால்  மிக மோசமான  மனிதாபிமான நெருக்க டியை கியூபா எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  கியூபாவை கைப்பற்றுவேன்,  அது எனக்கு  பெருமை, அது வளமான நாடு,  பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டது. கியூபாவை வைத்து நான் எதை வேண்டு மானாலும் செய்ய முடியும் என்றெல்லாம் பேசி இருந்தார்.  இந்நிலையில் தான் ரஷ்யாவும் சீனாவும் கியூபாவிற்கு ஆதரவாக கைநீட்டியுள்ளன. உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்ட பல ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கச்சா எண்ணெய்யுடன் கடலிலேயே உள்ளன. அவற்றுள் ஒன்றான ‘அனடோலி கொலோட்கின்’ (Anatoly Kolodkin) எனும் கப்பல் 7,30,000 பேரல் கச்சா எண்ணெய்யுடன் கியூபாவிலிருந்து சுமார் 3,000 கடல் மைல் தொலைவில் அட் லாண்டிக் பெருங்கடலில் உள்ளது. இது  இன்னும் 10 நாட்களில் கியூபாவை சென்ற டையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் தடை காரணமாக கடந்த மூன்று மாதங்களில் எந்த நாட்டி லிருந்தும் கியூபாவிற்கு கச்சா எண்ணெய் வராத நிலையில் இதுவே முதல் கப்பலாக உள்ளது.  அதேபோல ‘சீ ஹார்ஸ்’ (Sea Horse) என்ற ஹாங்காங் கொடியுடன் கூடிய மற்றொரு  கப்பலும் சுமார் 2,00,000 பேரல் டீசலை கியூபாவிற்கு ஏற்றிச் செல்வதாக கூறப் பட்டுள்ளது.  இந்தக் கப்பல்  நான்கு நாட்களில் கியூபா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சர்வதேச தடைகள் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கச்சா எண்ணெய் திருட்டு ஆகியவற்றின் காரணமாக இக்கப்பல்கள் தங்கள் பயணப்பாதையை மறைக்க செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவி களை அணைத்துவிட்டுப் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒளி கொடுக்கும் சீனா  தனது நட்பு நாடான கியூபாவுக்கு சீனா   சூரியசக்தி ஆற்றலை வழங்க முன் வந்துள் ளது. இது சீனாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உலகுக்குக் காட்டுவதோடு, லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் பொருளாதாரத் தடம் பதிந்துள்ளதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை உருவாக்குவதில் கியூபாவிற்குசீனா   தனது ஆதரவை தீவிரப்படுத்தும் என கியூபாவிற்கான சீனத் தூதர் ஹுவா சின் பேசிய போதுகூறியுள்ளார்.  கியூபாவின் மூன்று மருத்துவமனைகள் மற்றும் ஒரு முதியோர் இல்லத்தில் பொருத்து வதற்காக 5,000 “வீட்டு உபயோக” சூரிய சக்தி தகடுகள் உள்ளிட்ட சாதனங்கள்  வழங்கப்பட்டுள்ளது.  2028 க்குள் கியூபாவில் 49 புதிய “சூரியசக்தி பூங்காக்களை” (Solar Parks) உருவாக்க சீனா உதவி வருகிறது.

கியூப ஜனாதிபதி டிரம்புக்கு எச்சரிக்கை

கியூபாவை பலவந்தமாகக் கைப்பற்றுவோம்,  ஆட்சியைக்  கவிழ்ப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டி வரும் நிலையில்,  அமெரிக்கா எதிர்பார்க்காத எதிர்ப்பை சந்திக்கும். அமெரிக்கா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கியூபா “வெல்ல முடியாத எதிர்ப்பால்” (impregnable resistance)  முடியடிக்கும் என கியூப ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானல் கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.