கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்</strong></p>
<p>சேலம், நவ.25- எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை யில் கிராமிய வங்கி ஊழியர்களை உறு தியாக சேர்த்திட வேண்டும் வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை யில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை உறுதியாக சேர்த்திட வேண்டும். சங்கத் தின் வலிமையை குறைக்க பழிவாங் கும் நோக்கோடு இலாக்காவிலிருந்து வெளியேற்றியுள்ள எஸ்.எஸ்.மகா தேவ்வையாவை மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும். பிசினஸ் டார் கெட் டார்ச்சர் என்னும் போக்கினை முற் றிலும் கைவிட வேண்டும். துணை அஞ்ச லகங்களில் தினமும் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு இரண்டாவது டிராக் லெவல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் பழைய பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிரா மிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஊழியர்கள் ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற் றது. இதில் கோட்டத் தலைவர் பி. மோகன், கோட்டச் செயலாளர் வி. ராமு, கோட்டப் பொறியாளர் பி. சிவசங்கரன் செயலாளர், மத்திய அரசு ஓய்வு பெற் றோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
