முந்தய பக்கம்

வேளாண் கல்லூரி மாணவர்களின் ஊரக பங்கேற்பு மதிப்பீடு

3 Jan 2026, 4:57 pm
வேளாண் கல்லூரி மாணவர்களின்  ஊரக பங்கேற்பு மதிப்பீடு
<p><strong>வேளாண் கல்லூரி மாணவர்களின் &nbsp;ஊரக பங்கேற்பு மதிப்பீடு</strong></p> <p>பாபநாசம், ஜன.3- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே, கத்தரிநத்தம் ஊராட்சியில், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர். &nbsp;கிராமத்தின் வரைபடம், வள வரைபடம், பயிர் சாகுபடி பரப்பு, கல்வியறிவு விகிதம், மக்கள் தொகை விகிதம் போன்றவற்றை வரைபடங்களாக மாணவர்கள் வரைந்தனர். இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிராங்க்ளின், சரக ஆர்.ஐ சீதாலாதேவி, சார் ஆய்வாளர் நில அளவை அழகேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் லிங்குசாமி, வி.ஏ.ஓ விஜயலட்சுமி, அங்கன்வாடி உதவியாளர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram