வறட்சியால் வாடும் கிராமப்புற இந்தியா ரூ.2 லட்சம் கோடி சிறப்பு வேலைவாய்ப்பு தொகுப்பை அறிவிக்கக் கோரி அக் 2இல் நாடு முழுவதும் போராட்டம்
29 Sept 2026, 9:18 pm

வறட்சியால் வாடும் கிராமப்புற இந்தியா ரூ.2 லட்சம் கோடி சிறப்பு வேலைவாய்ப்பு தொகுப்பை அறிவிக்கக் கோரி அக் 2இல் நாடு முழுவதும் போராட்டம்

புதுதில்லிகிராமப்புற இந்தியாவில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து தேசிய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கவலை தெரிவித்துள்ளது. வறட்சி, மழையின்மை மற்றும் இயற்கைச் சீரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களுக்கு உதவத் தவறிய ஒன்றிய அரசை இந்தக் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது. விவசாயப் பணிகள் முடங்கியுள்ளதாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாலும் ஏழை எளிய மக்களின் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளன. கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் வேலை வழங்குவதே தற்போதைய அவசரத் தேவையாகும். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக ரூ. 2 லட்சம் கோடி சிறப்பு வேலைவாய்ப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் பெரிய

அளவிலான வேலைவாய்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்ட

மைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்குவதற்காக மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களைவகுத்து, போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 2 அன்றுநாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களை நடத்த கூட்டமைப்பின் புதுதில்லியில் நடைபெற்றக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உரிமையை பலவீனப்படுத்துவதா?

வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. கிராமப்புற மக்கள் முன்னெப்போதுமில்லாத நெருக்கடியைச் சந்தித்து வரும் இந்தக் காலகட்டத்தில், புதியநிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மூலம்வேலைவாய்ப்பு உரிமையைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்

J ரூ. 2 லட்சம் கோடி சிறப்புத் தொகுப்பு: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப் பகுதிகளுக்கு உடனடியாக சிறப்பு வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

J 200 நாட்கள் வேலை - ரூ. 700 கூலி: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தது 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், தினசரி கூலியாக ரூ. 700 வழங்க வேண்டும். வேலைவழங்கப்படவில்லை என்றால் சட்டப்பூர்வ வேலையின்மைப்படி வழங்கப்பட வேண்டும்.

J நகர்ப்புற ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பு: கிராமங்களில் வேலையின்மை அதிகரித்து வருவதால் நகர்ப்புறங்களுக்குப் பெயரும்ஏழை எளிய மக்களுக்காக நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், ஏழை மக்களின் பசியைப் போக்கவும் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது. அக்டோபர் 2 அன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களை மாபெரும் வெற்றிபெறச் செய்ய அனைவரையும் கூட்டமைப்பு அறைகூவி அழைத்துள்ளது.